மேலும் அறிய
Flop Movies: இந்தியன் 2 முதல் கங்குவா வரை! 2024-ஆம் ஆண்டு தோல்வியை சந்தித்த பிக் பட்ஜெட் படங்கள்!
Biggest Flop Movies of Kollywood 2024: 2024ல் தோல்வி கொடுத்த பெரிய பட்ஜெட் படங்களின் பட்டியலில் கமல் ஹாசனின் இந்தியன் 2 படம் முதல் கங்குவா வரையில் சில படங்கள் இடம் பெற்றுள்ளன.
2024-ல் வெளியான தோல்வி படங்கள்
1/6

தியேட்டருக்கு வரும் எல்லா படமும் வெற்றி கொடுப்பதில்லை. அதில் ஒரு சில படங்களைத் தவிர மற்ற படங்கள் குறைவான வசூல், நெகட்டிவ் விமர்சனம், தோல்வி என்று ஏதாவது ஒரு பட்டியலில் சேர்ந்துவிடுகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் திரைக்கு வந்து தோல்வி கொடுத்த மாஸான படங்களைப் பற்றி பார்க்கலாம்.
2/6

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில் திரைக்கு வந்த படம் இந்தியன் 2. கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்திற்கு எதிர்மறை விமர்சனம் தான் மிஞ்சியது. இந்தியன் படத்தை போன்று இந்தப் படத்தில் கதையும் இல்ல, கதாபாத்திரங்களும் இல்லை. ஒவ்வொரு முறையும் போலீசாரால் சுற்றி வளைக்கப்படும் இந்தியன், எஸ்கேப் ஆகி கடைசியில் மக்களிடம் சிக்கி அவர்களால் விரட்டியடிப்பது போன்ற கதை, மக்களை ஏமாற்றவே செய்தது. மொத்தத்தில் படம் ரசிகர்களுக்கு பிடிக்காத தோல்வி படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது. இதில் இந்தியன் 3 படமும் வரப் போகிறதாம். பொதுவாக முதல் படம் ஹிட் கொடுத்தால் பார்ட் 2, பார்ட் 3 படங்கள் எல்லாம் ஹிட் கொடுப்பதில்லை. இதற்கு தமிழ் சினிமாவில் பல படங்களை உதாரணங்களாக சொல்லலாம்.
Published at : 28 Nov 2024 09:57 AM (IST)
மேலும் படிக்க





















