மேலும் அறிய

Bangladesh Attack on Hindu: இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்வதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஷரியத்பூர் மாவட்டத்தில் மற்றொரு இந்து நபர் கொடூரமாக தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தின் ஷரியத்பூர் மாவட்டத்தில், மற்றொரு இந்து நபர், ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 வாரங்களில் 4-வது இந்த நபர் தாக்கப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

மேலும் ஒரு இந்து நபர் தீ வைத்து எரிப்பு

வங்கதேசத்தில் வன்முறைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது ஷரியத்பூர் மாவட்டத்தில் மற்றொரு இந்து நபர் மீது கொடூர தாக்குதல் நடத்திய ஒரு கும்பல், அவரை தீ வைத்து எரித்துள்ளது. தாக்குதலில் பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர், 50 வயதான கோகான் தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மருந்தகம் ஒன்றை நடத்திவரும் கோகான் தாஸ், நேற்று இரவு தனது கடையை மூடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு குழு அவரை சுற்றி வளைத்து, கூரிய ஆயுதங்களால் ​​தாக்குதல் நடத்தியுள்ளதும், அதைத் தொடர்ந்து அவர் மீது அந்த கும்பல் தீயும் வைத்துள்ளது. இந்த கொடூரமான சூழலில், அருகில் இருந்த குளம் ஒன்றில் குதித்து கோகான் தாஸ் உயிர் தப்பியுள்ளது, விசாரணையின் போது தெரியவந்துள்ளது. 

வங்கதேசத்தில் தீவிரமடைந்த வன்முறைகள்

வங்கதேசத்தில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, அங்கு வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன. மாணவர் போராட்டத்தை நடத்திய, இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தீபு சந்திர ஃதாஸ் என்ற இந்து இளைஞர் ஒருவரை, ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. அதோடு, அவரது உடலை இழுத்துவந்து சாலையில் பேட்ட அந்த கும்பல், தீ வைத்து எரித்தது.

இச்சம்பவம் உலகளவில் பெரும் பேசுபொருளான நிலையில், இதைத் தொடர்ந்து ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் மண்டல் என்ற 29 வயது இந்து இளைஞரை, அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் ஒன்று கடுமையாக தாக்கியதில், அவர் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அதோடு அடங்காத வன்முறை கும்பலால், ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்துவந்த பிஜேந்திர பிஸ்வாஸ்(42) என்ற இந்து தொழிலாளி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

வங்கதேசத்தில் கடந்த 15 நாட்களில், இந்து நபர் மீது நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இதுவாகும். இச்சம்பவம், வங்க தேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவது குறித்த பெரும் கவலைகளை எழுப்பியுள்ளது. இதனிடையே, வங்கதேசத்தில் நடைபெறும் இந்துக்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு, மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
Harvard University: ஹார்வர்ட் பல்கலை., 7 டேட்டா சைன்ஸ் படிப்புகள், இலவசமாக பயிலலாம் - விண்ணப்பிப்பது எப்படி?
Harvard University: ஹார்வர்ட் பல்கலை., 7 டேட்டா சைன்ஸ் படிப்புகள், இலவசமாக பயிலலாம் - விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

20 ஆண்டுகள் 5 தேர்தல்தோல்வியே சந்திக்காத இளைஞன்மோடியின் புதிய Boss
”ஓசூருக்கு எதுக்கு AIRPORT?”தட்டித்தூக்கிய நாயுடு பின்னணியில் மோடி?
OVERTAKE செய்த ஓட்டுநர் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து மதுரையில் பரபரப்பு
ஐயப்பன் கோயில் நடை அடைப்பு மகர விளக்கு சீசன் நிறைவு அடுத்த தரிசனம் எப்போது? | Sabarimalai | Sabarimala Devotees | Temple | Festival | Tamil News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
இபிஎஸ் வீட்டில் பாஜகவினருக்கு தயாரான சுவையான விருந்து.! யார் யாருக்கு எத்தனை தொகுதி- இன்று இறுதி முடிவு
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
Harvard University: ஹார்வர்ட் பல்கலை., 7 டேட்டா சைன்ஸ் படிப்புகள், இலவசமாக பயிலலாம் - விண்ணப்பிப்பது எப்படி?
Harvard University: ஹார்வர்ட் பல்கலை., 7 டேட்டா சைன்ஸ் படிப்புகள், இலவசமாக பயிலலாம் - விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை ; வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்திய கும்பல் !! மடக்கிய போலீஸ்
சென்னை ; வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்திய கும்பல் !! மடக்கிய போலீஸ்
Hyundai Bayon: ஃப்ராங்க்ஸை விடவேக்கூடாது..! ஹுண்டாயின் புதிய காம்பேக்ட் க்ராஸ்-ஓவர், ஹைப்ரிட் இன்ஜின்.. ரூ.7 லட்சமே
Hyundai Bayon: ஃப்ராங்க்ஸை விடவேக்கூடாது..! ஹுண்டாயின் புதிய காம்பேக்ட் க்ராஸ்-ஓவர், ஹைப்ரிட் இன்ஜின்.. ரூ.7 லட்சமே
K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
இனி வீடு, நிலம் வாங்க பத்திர பதிவு அலுவலகம் செல்ல தேவையில்லை.! இன்று முதல் அசத்தல் திட்டம் அறிமுகம்
இனி வீடு, நிலம் வாங்க பத்திர பதிவு அலுவலகம் செல்ல தேவையில்லை.! இன்று முதல் அசத்தல் திட்டம் அறிமுகம்
Embed widget