மேலும் அறிய
Vishal Lakshmi Menon : ‘நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அறிவிப்பேன்..’ கொந்தளித்த விஷால்!
"நான் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பதை ஆண்டு, தேதி, நேரம் மற்றும் எதிர்காலத்தில் டிகோட் செய்ய இது ஒன்றும் பெர்முடா டிரையாங்கிள் (Bermuda Triangle) அல்ல." - விஷால்.

விஷால்-லட்சுமி மேனன்
1/6

நடிகர் விஷால் துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி படங்களில் தற்போது பிசியாக உள்ளார். இதில் துப்பறிவாளன் 2 படத்தை அவரே இயக்கி வருகிறார்.
2/6

2012 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான “நான் சிகப்பு மனிதன்” படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
3/6

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல் கசிந்தது.
4/6

பின்னர் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஷால் அனிஷா என்பவரை மணக்க நிச்சயம் செய்தார். பின்னர் சில காரணங்களால் திருமணம் நின்றது.
5/6

தற்போது மீண்டும் விஷால் மற்றும் லட்சுமி மேனன் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியானதையடுத்து விஷால் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
6/6

அந்த அறிக்கையில், “பொதுவாக என்னைப் பற்றிய எந்தப் பொய்யான செய்திகளுக்கும் அல்லது வதந்திகளுக்கும் நான் பதிலளிப்பதில்லை, அது பயனற்றது என்று நான் உணர்கிறேன். ஆனால் இப்போது லட்சுமி மேனனுடனான எனது திருமணம் பற்றிய வதந்தி பரவி வருவதால், நான் இதை மறுக்கிறேன், இது முற்றிலும் ஆதாரமற்றது. இந்த வதந்திக்கு நான் பதிலளிக்க காரணம், ஒரு நடிகை என்பதை விட ஒரு பெண் இதில் சம்பந்தப்படுத்தப்படுகிறார் என்பது தான். நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைந்து அவரின் பிரைவசி மற்றும் இமேஜைக் கெடுக்கிறீர்கள். நான் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பதை ஆண்டு, தேதி, நேரம் மற்றும் எதிர்காலத்தில் டிகோட் செய்ய இது ஒன்றும் பெர்முடா டிரையாங்கிள் (Bermuda Triangle) அல்ல. நம்பிக்கை உணர்வு மேலோங்கும் நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்” என தெரிவித்துள்ளார். மீண்டும் விஷாலின் திருமண செய்தி உறுதியாகாதது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Published at : 11 Aug 2023 04:57 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
மயிலாடுதுறை
உலகம்
ஆட்டோ
உலகம்
Advertisement
Advertisement