Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: தம்பி கட்சி இப்பதான் ஆரம்பிச்சிருக்கு, அதை தட்டிக்கொடுத்து தான் வளர்க்கணும், ஆனா களத்துல நாங்க யாருன்னு இந்த நாலு பேருக்கும் நல்லாவே தெரியும் என்றார்

ஈரோடு மக்கள் சந்திப்பின் போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்த கருத்துகளுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்தார்.
களத்தில் யார் இருக்கிறார்?
திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவர் பேசியதாவது. களத்தில் யார் இருக்கிறார்? கட்சி ஆரம்பித்து விக்கிரவாண்டி தொகுதி, ஈரோடு கிழக்கு தொகுதி இடை த்தேர்தலில் நிற்காமல் போனது ஏன்? ஈரோட்டில் வந்து நிற்க வேண்டியது தானே? திமுகவும், நாம் தமிழர் கட்சி மட்டும் தானே மோதியது. எல்லோரும் போய் விட்டார்கள். இந்தியாவை ஆட்சி செய்யும் பாஜக வரவில்லை.
ஈரோடு கடப்பாரையா? அதெல்லாம் துருப்பிடிச்சு போச்சு
அதிமுக வரவில்லை. களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது தான் நகைச்சுவையாக இருக்கிறது. களத்திற்கு ஏன் வரவில்லை? ஈரோடு கடப்பாரை என விஜய் யாரை சொல்கிறார் என்று உங்களுக்கு தெரியாதா? ஈரோட்டு கடப்பாரையா? அதெல்லாம் துருப்பிடிச்சு, பழைய இரும்புக்கு போட்டு பேரிச்சம்பழம் வாங்கியாச்சு. இப்பதான் தெரிய வருது.. அப்போ தெரியலையா தீய சக்தினு?
என் தம்பிக்கு ஒரே எதிரி
என் தம்பிக்கு (விஜய்) ஒரே ஒரு எதிரி தான், ஆனா எனக்கு நாலு எதிரிங்க. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜகன்னு நாலு பேரோட நான் மல்லுக்கட்டுறேன். தம்பி கட்சி இப்பதான் ஆரம்பிச்சிருக்கு, அதை தட்டிக்கொடுத்து தான் வளர்க்கணும், ஆனா களத்துல நாங்க யாருன்னு இந்த நாலு பேருக்கும் நல்லாவே தெரியும்.
எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி என மறைந்த தலைவர்களின் பெயரைச் சொல்லி இன்னும் எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்றுவீர்கள்? கொள்கையைச் சொல்லி ஓட்டு கேட்பது நாங்கள் மட்டும் தான்; மற்றவர்கள் சின்னத்தை காட்டியும், பணத்தை காட்டியும் தான் ஓட்டு கேட்கிறார்கள். பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டால், அது நோட்டில் இருக்கும் காந்திக்கு போடும் ஓட்டு.






















