Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
விக்கிரவாண்டி அருகே ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இயக்கியதில் ஆம்னி பேருந்து ஒன்று பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி விபத்துகுள்ளானது. இது தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து மதுரை நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து விக்கிரவாண்டி அருகேயுள்ள பேரணி பகுதிக்கு வந்தபோது ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இயக்கியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து சங்கராபரணி ஆற்றின் தடுப்பு கட்டையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து பாலத்தின் நடுவில் சிக்கி கொண்டது. பேருந்தில் பயணித்த 26 பயணிகளில் 23 பேர் காயமடைந்தனர். இதில் பேருந்து ஓட்டுனர் அரவிந்தன், சக்திமோகன், மகாதேவன் ஆகிய மூவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. மற்ற பயணிகள் 23 பேருக்கு லேசான காயம் ஏற்படவே பேருந்தில் இருந்தவர்களை அவசர கால வழியாக மீட்கபட்டனர். பின்னர் அருகிலுள்ள முண்டியம்பாக்கம அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதிர்ஷடவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். பேருந்து விபத்தினால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் கிரேன் மூலம் பேருந்துவை அப்புறப்படுத்தி போக்குவரத்தினை போலீசார் சரி செய்தனர்.
இந்த விபத்து குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது





















