மேலும் அறிய
Mission Impossible 7 Review : சாகசங்களின் நாயகன் டாம் குருஸின் மிஷன் இம்பாசிபிள் 7 படம் எப்படி இருக்கு? குட்டி விமர்சனம் இதோ !
மிஷன் இம்பாஸிபள் பட சீரிஸின் ஏழாவது பாகமான டெட் ரெக்கனிங் முதல் பாகத்தின் குட்டி விமர்சனத்தை இங்கு காணலாம்.

மிஷன் இம்பாஸிபள் 7 விமர்சனம்
1/7

ஹாலிவுட்டின் ஆக்ஷன் ஹீரோ’ என்று சொல்லப்படும் டாம் குருஸ் இப்படத்தின் கதாயாகனாக மற்றும் ரெபெக்கா ஃபெர்குசன், ஹேய்லி ஆட்வெல், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
2/7

கதைக்களம் : ரஷ்யா ஒரு புதுவிதமான செயற்கை நுண்ணறிவுக் கருவியைக் கண்டுபிடிக்கிறது. இதற்கு என்டிடி என்று பெயர்.
3/7

இந்த கருவியை கொண்டு ஒரு நாட்டில் அணு ஆயுதத்தை கட்டுப்படுத்தலாம், தொழில்நுட்ப அடிப்படையில் இயக்கும் எந்த ஒரு இயந்திரத்தையும் இதனால் கட்டுப்படுத்த முடியும்.
4/7

இப்படியான ஒரு இயந்திரம் யார் கைகளுக்கு வருகிறதோ, அவர்கள் உலகத்தை எப்படியானதாக இருக்க தீர்மானிக்கிறார்களோ அப்படியானதாக மாற்றிவிட முடியும்.
5/7

இதை கட்டுப்படுத்தவோ அழிக்கவோ ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. ஒன்றோடு ஒன்று பொருந்தக்கூடிய இரண்டு சாவிகள் இருப்பவர்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். இந்த இரண்டு சாவிகளை தேடுவதற்கான வேலை ஈத்தனிடம் ஒப்படைக்கப்படுகிறது இதுதான் படத்தின் கதை.
6/7

இப்படத்தின் மிகப்பெரிய ஸ்டண்ட் எல்லாம் மிக அசட்டுத்தனமான காரணங்களுக்காக செய்தவையாக எளிதில் தோன்றிவிடுகின்றன. அதே சமயம் படத்தின் முக்கிய வில்லனாக இருப்பது சுயமாக சிந்திக்கும் திறன்கொண்ட ஒரு ரோபோட். இதனால் டாம் குருஸ் அசால்ட்டாக எதிரியை வென்றுவிடுவது சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது.
7/7

மொத்ததில் டாம் குருஸ் ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக இருக்கும். வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். இது இல்லாதது இப்படத்தின் குறையாக அமைந்திருக்கிறது.
Published at : 12 Jul 2023 04:56 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
மயிலாடுதுறை
உலகம்
ஆட்டோ
உலகம்
Advertisement
Advertisement