மேலும் அறிய

Annamalai Vs Thackeray: சவால் விட்ட அண்ணாமலை; பதிலடி கொடுத்த ஆதித்ய தாக்கரே; என்ன இப்படி சொல்லிட்டார்.?

மும்பைக்கு நிச்சயம் வருவேன், முடிந்தால் காலை வெட்டுங்கள் என அண்ணாமலை சவால் விட்ட நிலையில், அவருக்கு தாக்கரே சிவசேனாவின் ஆதித்ய தாக்கரே பதிலடி கொடுத்துள்ளார். அவர் என்ன கூறினார் தெரியுமா.?

மும்பை மகாராஷ்டிராவுக்குச் சொந்தமானது இல்லை என்று பிரசாரத்தின் போது அண்ணாமலை கூறியது, அங்கு அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலைக்கு அங்குள்ள பல எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அதற்கு அண்ணாமலை சவால் விட்ட நிலையில், சிவசேனாவின் ஆதித்ய தாக்கரே கடுமையான பதிலடியை கொடுத்துள்ளார். அவர், அண்ணாமலையை ஜீரோ என்றும் சொந்தத் தொகுதியில் டெபாசிட் கூட வாங்க முடியாதவர் என்றும் விமர்சித்துள்ளார்.

மும்பை பற்றி கருத்து தெரிவித்த அண்ணாமலை

மும்பையில், வரும் 15-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அங்கு பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு தமிழர்கள் கணிசமாக வாழ்ந்து வரும் நிலையில், அங்கு வசிக்கும் தமிழர்களிடையே பிரசாரம் செய்ய தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அங்கு சென்றார்.

பல்வேறு இடங்களில் தமிழர்களிடையே பேசிய அவர், ஒரு இடத்தில் பேசும்போது, மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் இல்லை, அது ஒரு சர்வதேச நகரம் என்று கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு அங்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி, பல்வேறு தரப்பில் விவாதமாக மாறியுள்ளது. மகாராஷ்டிராவையும் மராட்டியர்களையும் அவமதிக்கும் வகையில் அண்ணாமலை பேசிவிட்டதாகக் கூறி, கண்டங்கள் எழுந்துள்ளன. அங்குள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாகச் சிவசேனா இதை பெரிய விஷயமாக மாற்றி கடுமையாக விமர்சித்து வருகிறது.

சிவசேனா மிரட்டலுக்கு அண்ணாமலை பதிலடி

உத்தவ் தாக்கரே சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், மும்பை மாநகருக்குள் அண்ணாமலை கால் வைத்தால் காலை வெட்டுவோம் என எழுதப்பட்டிருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, “நான் மும்பைக்கு வருவேன், வரத்தான் போகிறேன். முடிந்தால் என் காலை வெட்டுங்கள் பார்ப்போம்.“ என்று கூறினார்.

அண்ணாமலை மீது ஆதித்ய தாக்கரே கடும் விமர்சனம்

இந்நிலையில், அண்ணாமலையின் கருத்துகள் குறித்து தாக்கரே சிவசேனாவின் ஆதித்ய தாக்கரே கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். பாஜகவில் அண்ணாமலை ஒரு ஜீரோ என்றும், சொந்த தொகுதியிலேயே டெபாசிட் வாங்க முடியாதவர் அண்ணாமலை எனவும், தேர்தலில் தோற்றுவிட்டு, நாட்டின் அடுத்த பிரதமரைப் போல பேசிக் கொண்டு இருக்கிறார் என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும், அண்ணாமலை மும்பை குறித்து எங்களுக்கு அறிவுரை வழங்கத் தேவையில்லை என்றும், அண்ணாமலையும் பாஜகவும் மகாராஷ்டிராவை அவமதித்துவிட்டனர் என்றும் தனது கண்டனத்தை ஆதித்ய தாக்கரே பதிவு செய்தார். அதோடு, “மும்பை பற்றிப் பேச அவர் யார்.? அண்ணாமலையும் பாஜகவும் மகாராஷ்டிராவை அவமதித்துள்ளனர். இதை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்றும் கடுமையாக விமர்சித்தார்.

அண்ணாமலை கருத்துக்கு பாஜக விளக்கம்

அண்ணாமலையின் இந்தக் கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அங்குள்ள பாஜக தலைவர்கள் இது குறித்து விளக்கமளித்துள்ளனர். மும்பையை பெருமைப்படுத்துவதற்காகவே அண்ணாமலை இந்த கருத்தைச் சொன்னதாகவும், மும்பையை அவமதிக்கும் நோக்கம் அண்ணாமலைக்கோ, பாஜகவுக்கோ இல்லை என்று அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Embed widget