Pongal Celebration |''பொங்கலோ பொங்கல்’’சமத்துவ பொங்கல் விழா களைகட்டிய தர்மபுரி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்மபுரி மாவட்ட செய்தியாளர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது..இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் எம் பி, முன்னாள் அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் ஆகியோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
தருமபுரி மாவட்ட செய்தியாளர்கள் சார்பில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பிரம்மாண்ட சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆர்.சதீஷ், எஸ்பி மகேஸ்வரன், எம்பி மணி ஆகியோர் பொங்கல் வைத்தனர். வாழை மரம், கலர் தோரணம், குறுத்தோலை, செங்கரும்புகளால் அலங்காரம் செய்து பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து படையலிட்டு வணங்கினர். இதனை அடுத்து சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் அனைவருக்கும் அறுசுவை விருந்து வைத்து உபசரித்தனர். இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், பி.பழனியப்பன், எம்எல்ஏக்கள் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், ஏ.கோவிந்தசாமி, வே.சம்பத்குமார், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள், செய்தியாளர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர்களுக்கு பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள் வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடினர்.
தர்மபுரி மாவட்ட சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





















