மேலும் அறிய

ADMK New alliance: அதிமுக கூட்டணியில் எதிர்பாராத திருப்பம்.. புதிய கட்சி வரப்போகுது.. தொண்டர்களுக்கு குஷியான அறிவிப்பை சொன்ன இபிஎஸ்

ADMK New alliance: அதிமுக கூட்டணியில் இணைக்க சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஓரிரு நாளில் புதிய கட்சி ஒன்று கூட்டணிக்குள் வரவுள்ளது என கூறியுள்ளார்.

சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு, கூட்டணி உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. அதிலும் ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த அதிமுக புதிய கட்சிகளை தங்களது அணியில் இணைத்து வருகிறது.

ஏற்கனவே பாஜகவை இணைத்த எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக பாமகவில் அன்புமணி அணியையும் சேர்த்துள்ளது. இதனையடுத்து மேலும் புதிய கட்சிகளை இணைக்க திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் மூன்றாவது நாளாக எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தி வருகிறார்.

நேர்காணல் நடத்தும் இபிஎஸ்

இன்று காலை விருதுநகர், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடமும், மாலை திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கும் நேர்காணல் நடத்தப்பட உள்ளது. நேர்காணலில் கலந்து கொண்டவர்களிடம் பல்வேறு கேள்விகளை எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்து வருகிறார். கட்சிக்காக கலந்து கொண்ட போராட்டம், தேர்தலில் போட்டியிடுவதற்கான செலவு விவரங்களையும் கேட்டார். இதனை தொடர்ந்து விருப்ப மனு கொடுத்த நிர்வாகிகள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி,அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளது. மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் புதிய கட்சி

ஓரிரு நாளில் புதிய கட்சி ஒன்று கூட்டணிக்குள் வரவுள்ளதாகவும், அதிமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக அமையும் எனவும். அனைவரும் நம்பிக்கையோடு இருங்கள் என தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளித்தவர், அதிமுக தலைமை யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் வெற்றிக்கு உழைக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் வலியுறுத்தினாஃ. 

அதிமுக கூட்டணியில் புதிய கட்சி எது.?

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தற்போது வரை பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் உள்ளது. தற்போது டிடிவி தினகரனின் அமமுகவிடம் பாஜக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதேபோல தேமுதிகவிடம் அதிமுக தரப்பு பேச்சுவார்த்தையானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே ஏற்கனவே அதிமுக சார்பில் ராஜ்யசபா சீட் தேமுதிகவிற்கு தருவதாக உறுதியளிக்கப்பட்ட நிலையில், சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பிரேமலதா விஜயகாந்த் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. எனவே ஓரிரு நாட்களில் தேமுதிக அதிமுக கூட்டணியில் இணையும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK Alliance: திமுக-வின் மாஸ்டர் ப்ளான்.. வெற்றிக்கு இதான் வழி! கூட்டணி கட்சிகள் என்ன பண்ணுமோ?
DMK Alliance: திமுக-வின் மாஸ்டர் ப்ளான்.. வெற்றிக்கு இதான் வழி! கூட்டணி கட்சிகள் என்ன பண்ணுமோ?
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
Manickam Tagore vs DMK: ‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |
Pattimandram Raja Caste Controversy | ’’நீங்க என்ன ஆளுங்க?’’பெண்ணிடம் சாதியைக் கேட்ட பட்டிமன்ற ராஜா
Annamalai RSS meeting | ”உங்ககிட்ட PLAN-ஏ இல்ல” ஓபனாக கேட்ட அண்ணாமலை! புது பதவி கொடுக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance: திமுக-வின் மாஸ்டர் ப்ளான்.. வெற்றிக்கு இதான் வழி! கூட்டணி கட்சிகள் என்ன பண்ணுமோ?
DMK Alliance: திமுக-வின் மாஸ்டர் ப்ளான்.. வெற்றிக்கு இதான் வழி! கூட்டணி கட்சிகள் என்ன பண்ணுமோ?
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
Manickam Tagore vs DMK: ‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
Holiday Special Bus: 2 நாள் தொடர் விடுமுறை, மஹாசிவராத்திரிக்கு சிறப்பு பேருந்து.! போக்குவரத்து துறை சூப்பரான அறிவிப்பு
2 நாள் தொடர் விடுமுறை, மஹாசிவராத்திரிக்கு சிறப்பு பேருந்து.! போக்குவரத்து துறை சூப்பரான அறிவிப்பு
டீக்கடை தகராறு... ரத்த வெள்ளத்தில் பிரபல ரவுடி: கிரைண்டர் கல்லால் தாக்கிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
டீக்கடை தகராறு... ரத்த வெள்ளத்தில் பிரபல ரவுடி: கிரைண்டர் கல்லால் தாக்கிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Maha Shivaratri 2026: மகா சிவராத்திரி விரதம் யாரெல்லாம் இருக்கக் கூடாது? - சிவனின் ஆசியைப் பெறுவது எப்படி?
மகா சிவராத்திரி விரதம் யாரெல்லாம் இருக்கக் கூடாது? - சிவனின் ஆசியைப் பெறுவது எப்படி?
Embed widget