மேலும் அறிய
Vettaiyan : இந்த தீபாவளிக்கு சரவெடியாக வரப்போகிறது ரஜினிகாந்தின் வேட்டையன்!
Vettaiyan : த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படத்தின் ரிலீஸ் குறித்த உறுதியான தகவல் ஒன்றை படக்குழு தெரிவித்துள்ளது.

வேட்டையன் ரிலீஸ்
1/7

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். அப்படம் அவருக்கு ஒரு சிறந்த கம்பேக் படமாக அமைந்தது.
2/7

கேமியோ கதாபாத்திரத்தில் சமீபத்தில் வெளியான 'லால் சலாம்' படத்தில் நடித்திருந்தார்.
3/7

அடுத்ததாக 'ஜெய்பீம்' புகழ் த.செ. ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
4/7

அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
5/7

மார்ச் மாதத்திற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
6/7

ரஜினிகாந்த் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் வேட்டையன் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
7/7

'வேட்டையன்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது என்ற உறுதியான தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
Published at : 14 Feb 2024 01:07 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement