மேலும் அறிய

ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?

ADMK BJP TN Politics: அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தைகளை இறுதிசெய்வதற்காக, தமிழ்நாடு தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று மீண்டும் சென்னை வரவுள்ளார்.

ADMK BJP TN Politics: பியூஷ் கோயலின் இன்றைய வருகையின்போது தொகுதிப் பங்கீடு, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாம்.

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே, தங்களது கூட்டணியை வலுவானதாக நிரூபிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையிலான பொதுக்கூட்டத்தை அதிமுக - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது. வரும் 23ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், தங்களது கூட்டணியில் இடம்பெற உள்ள அனைத்து கட்சி தலைவர்களையும் மேடையேற்ற அதிமுக திட்டமிட்டுள்ளது. ஆனால், இன்னும் தொகுதிப்பங்கீடு மற்றும் புதிய கட்சிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீடித்தபடியே உள்ளன. இந்நிலையில் தான் தமிழ்நாடு தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று மீண்டும் சென்னை வரவுள்ளார்.

சென்னை வரும் பியூஷ் கோயல்:

தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்பாகவே எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இடம்பெற உள்ளன? யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன? கூட்டணியில் உள்ள கட்சியில் நிலவும் உட்கட்சி பிரச்னைகளை முடிவுக்கு கொண்டுவருவது, பிரிந்து கிடக்கும் குழுக்களை ஒன்றிணைப்பது போன்றவற்றை முடிவுக்கு கொண்டு வர பாஜக தீவிரம் காட்டி வருகிறது. திமுகவிற்கு எதிரான வாக்குகள் சிதறாமல் ஒட்டுமொத்தமாக அறுவடை செய்ய, எதிர்க்கட்சிகளை ஒரே கூட்டணியில் திரட்டுவது அவசியம் என பாஜக கருதுகிறதாம். இதன் காரணமாக, மேற்குறிப்பிடப்பட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கவே பியூஷ் கோயல் இன்று சென்னை வருவதாக கூறப்படுகிறது.

NDA கூட்டணி இறுதியாகுமா?

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தற்போது பாஜக, அன்புமணி தலைமயிலான பாமக, தமிழ்மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக் கட்சி, ஜான் பாண்டியன் மற்றும் ஏ.சி. சண்முகம் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர், இதுபோக ராமதாஸ் தலைமையிலான பாமக மற்றும் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக முயன்று வருகிறது. ஒட்டுமொத்தமாக இந்த கூட்டணியில் இடம்பெறுவது யார் யார் என்பது வரும் 23ம் தேதிக்கு முன்னதாகவே இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இலக்காக கொண்டே இன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிக்க பியூஷ் கோயல் திட்டமிட்டுள்ளாராம். தேமுதிகவை கூட்டணிக்குள் இடம்பெறச் செய்வதும் பேச்சுவார்த்தையில் இடம்பெற வாய்ப்புள்ளதாம்.

தொகுதிப் பங்கீடு?

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 170 முதல் 180 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டு வருகிறதாம். 64 முதல் 74 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க முன்வந்துள்ளதாம். இதில் பாஜக 50 சீட்டுகள் வரை கேட்டாலும் 30 தொகுதிகளே அதிகம் என எடப்பாடி தரப்பு வலியுறுத்தி வருகிறதாம். அன்புமணி தரப்புக்கு 17 சட்டமன்ற தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டதாக தெரிகிறது. டிடிவி தினகரன் கூட்டணிக்கு வந்தால், ஒற்றை இலக்கில் பெரிய எண்ணில் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. கூட்டணியில் உள்ள பல சிறிய கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வலியுறுத்தி வருகின்றன. அதேநேரம், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற கூட்டணி கட்சிகள் தங்களது வலிமையை உணர்ந்து தேர்தலில் களம் கண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது அதிமுகவின் அறிவுறித்தலாக உள்ளதாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
Manickam Tagore vs DMK: ‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
Holiday Special Bus: 2 நாள் தொடர் விடுமுறை, மஹாசிவராத்திரிக்கு சிறப்பு பேருந்து.! போக்குவரத்து துறை சூப்பரான அறிவிப்பு
2 நாள் தொடர் விடுமுறை, மஹாசிவராத்திரிக்கு சிறப்பு பேருந்து.! போக்குவரத்து துறை சூப்பரான அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |
Pattimandram Raja Caste Controversy | ’’நீங்க என்ன ஆளுங்க?’’பெண்ணிடம் சாதியைக் கேட்ட பட்டிமன்ற ராஜா
Annamalai RSS meeting | ”உங்ககிட்ட PLAN-ஏ இல்ல” ஓபனாக கேட்ட அண்ணாமலை! புது பதவி கொடுக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
Manickam Tagore vs DMK: ‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
Holiday Special Bus: 2 நாள் தொடர் விடுமுறை, மஹாசிவராத்திரிக்கு சிறப்பு பேருந்து.! போக்குவரத்து துறை சூப்பரான அறிவிப்பு
2 நாள் தொடர் விடுமுறை, மஹாசிவராத்திரிக்கு சிறப்பு பேருந்து.! போக்குவரத்து துறை சூப்பரான அறிவிப்பு
டீக்கடை தகராறு... ரத்த வெள்ளத்தில் பிரபல ரவுடி: கிரைண்டர் கல்லால் தாக்கிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
டீக்கடை தகராறு... ரத்த வெள்ளத்தில் பிரபல ரவுடி: கிரைண்டர் கல்லால் தாக்கிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Maha Shivaratri 2026: மகா சிவராத்திரி விரதம் யாரெல்லாம் இருக்கக் கூடாது? - சிவனின் ஆசியைப் பெறுவது எப்படி?
மகா சிவராத்திரி விரதம் யாரெல்லாம் இருக்கக் கூடாது? - சிவனின் ஆசியைப் பெறுவது எப்படி?
Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
Manickam Tagore: 2006ல் விட்டது தப்பு.. ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வரை சீண்டிய மாணிக்கம் தாகூர் எம்.பி.,
Embed widget