மேலும் அறிய

அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?

அஜித்தின் மங்காத்தா படம் 23ம் தேதி ரீ ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், விஜய்யின் தெறி படம் அதற்கு போட்டியாக அதே நாளில் ரீ ரிலீஸ் ஆகிறது.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு இவர் அரசியலில் முழு நேரமும் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

தெறி ரீ ரிலீஸ்:

இந்த நிலையில், இவர் நடித்த கடைசி படமான ஜனநாயகன் இந்த பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்சார் விவகாரத்தில் சிக்கிய ஜனநாயகன் பொங்கலுக்கு வெளியாகாத நிலைக்கு ஆளாகி நீதிமன்ற வழக்கில் சிக்கியுள்ளது. 

இந்த நிலையில், விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக தெறி படம் பொங்கல் விருந்தாக கடந்த 15ம் தேதி வெளியாகும் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்திருந்தார். ஆனால், புதிய படங்களான வா வாத்தியாரே, தலைவர் தம்பி தலைமையில் படங்களின் வெளியீட்டிற்காக தெறி படத்தின் ரீ ரிலீஸ் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. 

மங்காத்தாவிற்கு போட்டி:

இந்த நிலையில், தெறி படம் வரும் 23ம் தேதி ரீ ரிலீஸ் ஆகும் என்று படத்தின் தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். இதே 23ம் தேதி அஜித்குமார் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்த நிலையில், மங்காத்தா படத்திற்கு போட்டியாக தெறி படம் வெளியாகிறது. 

தமிழ்நாட்டில் அதிகளவு ரசிகர்களை கொண்ட நடிகர்கள் விஜய் மற்றும் அஜித். இருவரும் சமகாலத்தில் வளர்ந்து தங்களுக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கிக் கொண்டவர்கள். இவர்கள் இருவரது படங்களும் திரையரங்கில் மோதிக் கொண்ட தருணத்தில், இவர்களது ரசிகர்கள் இணையத்தில் மோதிக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர். 

ஆனால், விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்வதற்கு மிகவும் கவனமாக இருந்து வருகிறார். குறிப்பாக, அஜித் ரசிகர்களின் வாக்குகளை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதில் விஜய் தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் பல இடங்களில் அஜித்தின் பெயரை நண்பர் அஜித் என்று குறிப்பிட்டு வருகிறார். 

வாக்கு வங்கி பாதிப்பு:

கரூர் விவகாரம், ஜனநாயகன் பிரச்சினை, ரஜினி ரசிகர்களுடன் விஜய் ரசிகர்கள் இணையத்தில் மல்லுகட்டுவது போன்ற பல விவகாரங்கள் தவெக-விற்கு எதிராகவே இருக்கும் நிலையில், தற்போது அஜித் ரசிகர்களை சீண்டுவது போல மங்காத்தாவிற்கு போட்டியாக தெறி படம் ரீ ரிலீஸ் ஆகிறது. 

தெறி படத்தை ரீ ரிலீஸ் செய்வது படத்தின் தயாரிப்பாளர் முடிவாக இருந்தாலும், இதனால் பாதிக்கப்படுவது விஜய்யின் தவெக வாக்கு சதவீதமே ஆகும். விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்கள் பலருமே மங்காத்தாவிற்கு போட்டியாக தெறி படத்தை ரீ ரிலீஸ் செய்வது தேவையற்ற வேலை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். 

விஜய்க்கு பின்னடைவு:

இதனால், மீண்டும் இணையத்தில் விஜய் - அஜித் ரசிகர்கள் மோதல் உருவாவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவும், இது இன்னும் 4 மாத காலத்திற்குள் நடக்க உள்ள தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றும் கருதப்படுகிறது. விஜய்க்கு திரையுலக தரப்பில் இருந்து வெளிப்படையான அரசியல் ஆதரவு பெரியளவில் வராத நிலையில், மீண்டும் விஜய் - அஜித் ரசிகர்கள் மோதல் உருவானால் விஜய்க்கு மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
TN Weather: வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
இந்தியாவாலே முடியாததை செய்து காட்டிய இத்தாலி..! முதல் டி20 உலகக்கோப்பையிலே இப்படி ஒரு வரலாறா?
இந்தியாவாலே முடியாததை செய்து காட்டிய இத்தாலி..! முதல் டி20 உலகக்கோப்பையிலே இப்படி ஒரு வரலாறா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும்: ஃபெவிகால் போட்டு ஒட்ட முயற்சி! வைகைச் செல்வன் பரபரப்பு தகவல்!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
TVK: புதுசுகளுக்குத்தான் சீட்டு.. காலம் காலமா உழைச்சவனுக்கு வேட்டு! விஜய் முடிவால் அப்செட்டில் தவெக!
TN Weather: வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக் கடலில் புயல் சின்னம்? பிப்ரவரி 15-ல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் எச்சரிக்கை
இந்தியாவாலே முடியாததை செய்து காட்டிய இத்தாலி..! முதல் டி20 உலகக்கோப்பையிலே இப்படி ஒரு வரலாறா?
இந்தியாவாலே முடியாததை செய்து காட்டிய இத்தாலி..! முதல் டி20 உலகக்கோப்பையிலே இப்படி ஒரு வரலாறா?
Nainar Nagendran: மல்லுக்கட்டும் திமுக-காங்., .. பாஜகவிற்கு ஆட்சி அதிகாரம் வேண்டாம் - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
Nainar Nagendran: மல்லுக்கட்டும் திமுக-காங்., .. பாஜகவிற்கு ஆட்சி அதிகாரம் வேண்டாம் - நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
Kim Jong Un Successor: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அடுத்த வாரிசு யார்.? தென் கொரியா வெளியிட்ட முக்கிய தகவல்
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் அடுத்த வாரிசு யார்.? தென் கொரியா வெளியிட்ட முக்கிய தகவல்
Nepal vs Italy T20 WC: லிஸ்ட்டில் இல்லாத இந்தியா! வரலாற்றில் இடம்பிடித்த இத்தாலி.. நேபாளத்தை 10 விக்கெட் வித்தாயசத்தில் வீழ்த்தி முதல் வெற்றி..
Nepal vs Italy T20 WC: லிஸ்ட்டில் இல்லாத இந்தியா! வரலாற்றில் இடம்பிடித்த இத்தாலி.. நேபாளத்தை 10 விக்கெட் வித்தாயசத்தில் வீழ்த்தி முதல் வெற்றி..
AI Flight Crash: திட்டமிட்டு இன்ஜினை ஆஃப் செய்த பைலட்? 260 பேரை காவு வாங்கிய விமான விபத்து - அதிர்ச்சி ரிப்போர்ட்
AI Flight Crash: திட்டமிட்டு இன்ஜினை ஆஃப் செய்த பைலட்? 260 பேரை காவு வாங்கிய விமான விபத்து - அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget