மேலும் அறிய
Nayan Vicky : "சுயநலத்துக்கு பின்னால் பொதுநலன் உள்ளது.." நேரடியாக பேசிய நயன்!
Nayan Vicky : சேலம் மாவட்டத்தில் நடைப்பெற்ற பெமி 9 வெற்றி விழாவில் பல விஷயங்களை பற்றி பேசினார் நயன்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்
1/6

சினிமா உலகை தாண்டி பிசினஸ் உலகிலும் கலக்கி வருகிறார் நயன். முதலில் லிப் பாம் கம்பனி தொடங்கிய இவர், 9 ஸ்கின் எனும் ஸ்கின் கேர் பிராண்டை தொடங்கினார். இந்த இரண்டு பிசினஸுடன், ஃபெமி 9 எனும் சானிட்டரி நாப்கின் பிராண்டையும் நடத்தி வருகிறார்.
2/6

இந்நிலையில், சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நயன்தாராவின் நிறுவனமான பெமி 9 வெற்றி விழா நடைபெற்றது.
3/6

அதில், “சுயநலத்துக்கு பின்னால் பொதுநலன் உள்ளது. சானிட்டரி நாப்கின் குறித்த விழிப்புணர்வு நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சென்றடைய வேண்டும்.இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்.” என்று பேசினார் நயன்.
4/6

“பெண்கள் நல்லா இருந்தா சமுதாயமும் நல்லா இருக்கும். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் உள்ளது போல; சாதித்த பெண்களுக்கு பின்னாலும், மகிழ்ச்சியாக உள்ள பெண்களுக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு ஆண் இருப்பார்.எனக்கு பின்னால் எனது கணவர் விக்னேஷ் சிவன் உள்ளார். அவரை சந்தித்து முதலே எனக்கு துணையாகவே உள்ளார்.” என்று ஆண்களை பற்றி பேசினார் நயன்தாரா
5/6

மேலும் பேசிய அவர், “யாரும் என்னை கேள்வி கேட்கவில்லை என்றால் அதுதான் பெரிய விஷயம் என்று நினைத்தேன். ஆனால் இதோடு ஏன் நிறுத்துகிறீர்கள் என கேட்பவர்தான் விக்னேஷ் சிவன்.” என கூறி தன் வெற்றிக்கு ஊக்கம் கொடுப்பவர் விக்கி என தெரிவித்தார்.
6/6

“சுயநலத்துக்கு பின்னால் இருக்கும் பொதுநலம் எனது வணிகத்தை நியாயப்படுத்துகிறது.. சானிட்டரி நேப்கின் குறித்த விழிப்புணர்வு பெரும்பாலானோரை சென்றடையவில்லை. இதுகுறித்து விழிப்புணர்வு அனைத்து பெண்களையும் சென்றடைய வேண்டும்.” என்றும் பேசினார் நயன்தாரா
Published at : 10 Jan 2024 05:16 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion