மேலும் அறிய
Leo Success Meet : விஜய் நடித்த லியோ படத்தின் வெற்றி விழாவில் நடந்த ஹைலைட்ஸ்!
Leo Success Meet : லியோ படத்தின் வெற்றி விழாவில் நடந்த முக்கியமான நிகழ்வுகளின் தொப்பை இங்கு காணலாம்.
லியோ வெற்றி விழாவில் விஜய்
1/9

“இரண்டு வேட்டைக்கார்கள் காட்டிற்கு செல்கிறார்கள். ஒரு வேட்டைக்காரர் வில் அம்பையும் இன்னொரு வேட்டைக்காரர் ஈட்டி எடுத்துக் கொண்டும் போகிறார்கள். வில் அம்பு எடுத்துச் செல்பவர் முயலை வேட்டையாடுகிறார். ஈட்டியை எடுத்துச் செல்பவர் யானையை வேட்டையாட முயற்சி செய்து தோற்றுப் வெறுங்கையோடு திரும்புகிறார். இந்த இரண்டு நபர்களில் யார் வெற்றிபெற்றது என்று கேட்டால் யானையை வேட்டையாட முயற்சி செய்தவர் தான் வெற்றி பெற்றார். எப்போதும் நமக்கு எளிமையாக முடியும் ஒன்றை செய்வதைவிட நமக்கு கடினமான ஒன்றை முயற்சி செய்வதே வெற்றி”-விஜய்யின் குட்டி ஸ்டோரி
2/9

“புரட்சி தலைவருன்னா அது ஒருத்தர்தான், நடிகர் திலகம்னா அது ஒருத்தர்தான், புரட்சிக்கலைஞர் என்றால் அது ஒருத்தர்தான், சூப்பர் ஸ்டார் என்றால் ஒருத்தர்தான், உலகநாயகன் என்றால் அது ஒருத்தர்தான், தல என்றால் அது ஒருத்தர்தான்.. அதேபோல் தளபதிக்கு அர்த்தம் தெரியும்ல?.. மன்னருக்கு கீழே அவர் இருப்பாரு..மன்னர்கள் ஆணையிடுவதை அவர்கள் நிறைவேற்றுவார்கள். என்னை பொறுத்தவரை மக்களாகிய நீங்கள்தான் என் மன்னர்கள். நான் உங்களுக்கு கீழே இருக்கிற தளபதி. நீங்க ஆணையிடுங்க நான் செஞ்சிட்டு போறேன்” - விஜய்
Published at : 02 Nov 2023 01:08 PM (IST)
மேலும் படிக்க





















