Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata Curvv EV Offers: டாடா நிறுவனம் தனது Tata Curvv EV காருக்கு 3.95 லட்சம் ரூபாய் தள்ளுபடி அளித்துள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டில் வாடிக்கையாளர்கள் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்தியாவில் கார் நிறுவனங்களும் மின்சார கார்கள் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ரூ.4 லட்சம் தள்ளுபடி:
மின்சார கார் தயாரிப்பில் முன்னணி கார் நிறுவனமாக இருப்பது டாடாவாக உள்ளது. டாடா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் தனது கார்களுக்கு தள்ளுபடி அளித்து வருகிறது. 2025ம் ஆண்டின் கடைசி மாதமான இந்த டிசம்பர் மாதத்தில் டாடா நிறுவனம் தனது மின்சார கார்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இதன்படி, டாடா நிறுவனம் Tata Curvv EV காருக்கு டிசம்பர் மாத தள்ளுபடியாக 3.95 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது. இது இந்த காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை ரூபாய் 18.67 லட்சம் ( ஆன்ரோட்) ஆகும். தற்போது சுமார் 4 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டிருப்பதால் இந்த காரின் விலை ரூபாய் 15 லட்சத்திற்கும் குறைவாக வந்துள்ளது.
மைலேஜ் எப்படி?
இந்த கார் 45 கிலோவாட் மற்றும் 55 கிலோவாட் பேட்டரி கொண்ட வேரியண்டில் விற்பனையில் உள்ளது. சிட்டி, எகோ, ஸ்போரட்ஸ் மாடல்களில் அசத்தலான தோற்றத்துடன் இந்த கார் உள்ளது. 165 பிஎச்பி மற்றும் 215 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.
45 கிலோவாட் பேட்டரி கொண்ட Tata Curvv EV காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 430 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 55 கிலோவாட் பேட்டரி கொண்ட Tata Curvv EV கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 502 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது.
வேரியண்ட்:
பாதுகாப்பு அம்சத்தில் தரம் நிறைந்த இந்த காருக்கு 5 ஸ்டார் பாதுகாப்பு தரக்குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் மொத்தம் 8 வேரியண்ட் உள்ளது.
1. Curvv EV Creative 45 - ரூ.18.67 லட்சம்
2. Curvv EV Accomplished 45 - ரூ.19.72 லட்சம்
3. Curvv EV Accomplished 55 - ரூ.20.51 லட்சம்
4. Curvv EV Accomplished Plus S 45 - ரூ.20.55 லட்சம்
5. Curvv EV Accomplished Plus S 55 - ரூ.22.61 லட்சம்
6. Curvv EV Empowered Plus A 55 - ரூ.23.38 லட்சம்
7. Curvv EV Empowered Plus A 55 Dark Edition - ரூ.23.54 லட்சம்
சிறப்பம்சங்கள்:
45 என்பது 45 கிலோவாட் பேட்டரி கொண்ட கார் ஆகும். 55 என்பது 55 கிலோவாட் பேட்டரி கொண்ட கார் ஆகும். டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வின்டா சன்ஷேட்ஸ் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளது. பேட்டரிககு வாழ்நாள் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.
அடாஸ் வசதி கொண்டது. ரெகுலர் சார்ஜரில் சார்ஜ் செய்தால் 17 மணி நேரம் ஆகும். ஏசி ஃபாஸ்ட் சார்ஜரில் சார்ஜ் செய்தால் 6.36 மணி நேரம் ஆகும். டிசி ஃபாஸ்ட் சார்ஜ் செய்வதற்கு 10 முதல் 80 சதவீதம் ஆவதற்கு 40 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
இந்த காரில் 12.25 இன்ச் டச்ஸ்கிரீன் உள்ளது. பனோராமிக் சன்ரூஃப் மேற்கூரை உள்ளது. ஸ்பூக் ஸ்டீரிங் டிஜிட்டல் லோகோ வசதி உள்ளது. ஏசிக்கு டச் கன்ட்ரோல் உள்ளது. 360 டிகிரி கேமரா வசதி உள்ளது. கூல்ட் கிளோவ் பாக்ஸ், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லஸ் சார்ஜர் வசதி உள்ளது. ஏபிஎஸ் வித் இபிடி வசதி உள்ளது. 2 அடாஸ் சூட் வசதி உள்ளது. இந்த காரில் 6 ஏர்பேக் வசதி உள்ளது.
இந்த கார் மஹிந்திரா பிஇ6, டாடா நெக்ஸான் இவி, ஹுண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக், டாடா ஹாரியர் இவி கார்களுக்கு இந்த கார் போட்டியாக உள்ளது.





















