மேலும் அறிய
Thug Life : நருட்டோவை கண் முன் கொண்டு வரும் கமல் ஹாசனின் தக் லைஃப்!
Thug Life : ஜப்பான் நாட்டில் பிரபலமாக இருக்கும் நருடோ அனிமேஷன் படத்தை கண் முன் கொண்டு வருகிறது கமலின் தக் லைஃப் படம்.

தக் லைஃப் படத்தில் கமலின் லுக்
1/8

கமல் ஹாசனின் 234 படத்தை மணி ரத்னம் இயக்க, மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஆகிய இரு தயாரிப்பு நிறுவனங்களும் சேர்ந்து தயாரிக்கிறது.
2/8

இப்படத்தின் டைட்டில் மாலை 5 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு வந்த பின், ஓ காதல் கண்மணி படத்தில் மணியுடன் பணியாற்றிய துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வந்தது.
3/8

அதனையடுத்து பொன்னியின் செல்வன் படத்தில் டைட்டில் கேரக்டரில் நடித்த ஜெயம் ரவியும் இந்த குழுவில் இணைகிறார் என்று அறிவிக்கப்பட்டது.
4/8

அத்துடன் நடிகை திரிஷாவும் நடிக்கிறார் என்ற அறிவிப்பும் வெளியானது.
5/8

சரியாக மாலை 5 மணிக்கு, கமலின் 234 படத்தின் டைட்டில் ரிவீல் வீடியோ வெளியானது. இப்படத்திற்கு தக் லைஃப் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
6/8

இந்த வீடியோவில் கமலின் லுக், ஜப்பான் அனிமேவான நருட்டோவை நினைவுக்கு கொண்டு வந்தது. சூர்யாவின் 7ஆம் அறிவு படம், மருதநாயகம் ஆகியவை கண்முன் வந்து சென்றது.
7/8

“என் பேரு இரங்கராயர் சக்திவேல் நாயக்கன். காயல்பட்டினக்காரர். பொறக்கும் போதே என் தலையில் எழுதி வச்சிட்டாங்கா..சக்திவேல் நாயக்கன் க்ரிமினல், குண்டா, யாக்கூசானு.. யாக்கூசானா ஜப்பான் மொழியில கேங்ஸ்டர்னு சொல்லுவாங்க.. காளை என்ன தேடி வந்தது இது முதல் முறை இல்லை... கடைசி முறையும் இல்லை...என் பேரு இரங்கராயர் சக்திவேல் நாயக்கன்..நியாபகம் வச்சிக்கோங்க..” என்று வித்தியாசமாக வசனம் பேசி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளார்.
8/8

இந்த படம் எந்தக்கதையை விவரிக்கிறது என்பது டீசர், ட்ரெய்லர் பார்த்தால்தான் புரியும். இப்படத்திற்கு மணிரத்னத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசைமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 06 Nov 2023 06:05 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement