மேலும் அறிய
15 Years of SMS : டாம் அண்ட் ஜெர்ரி காதல் கதை.. 15 ஆண்டுகளை நிறைவு செய்யும் சிவா மனசுல சக்தி!
15 Years of SMS : ஃபீல் குட் காதல் படமான சிவா மனசுல சக்தி 2009 ஆம் ஆண்டில் காதலர் தினத்திற்கு முன்பு வெளியானது.

சிவா மனசுல சக்தி ஸ்டில்
1/6

கலகலப்பு நிறைந்த ரொமாண்டிக் படங்களை இயக்கும் ராஜேஷின் கைவண்ணத்தில், ஜீவா - அனுயா நடித்த படம் சிவா மனசுல சக்தி.
2/6

சிவாவிற்கு சக்திக்கும் ரயில் பயணத்தில் தொடங்கும் பழக்கம், சினேகிதமாக மாறி உண்மை காதலாக உருவெடுக்கும். இதற்கு இடையே இவர்கள் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள் படக்கதையை இறுக்கி பிடித்திருக்கும்
3/6

சிவாவின் நண்பனாக வரும் சந்தானம், அம்மாவாக வரும் ஊர்வசி, சக்தியின் அப்பாவாக ஞானசம்பந்தம், சிறப்பு தோற்றத்தில் வரும் ஆர்யா, ஷகீலா என அனைவரின் கதாபாத்திரங்களும் மனதில் நிற்கும்படியாக அமைந்திருக்கும்.
4/6

“மச்சி ஒரு குவாட்டர் சொல்லு”, “அவ போய் ஆறு மாசம் ஆகுது”, “மட்டன் குஸ்காவா”, “ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மச்சி”, “ நல்லவங்க பேச்சு ரீச் ஆகும்.. என்ன கொஞ்சம் லேட் ஆகும்”, “அவ கிட்ட புடிச்சா ஒரே விஷயம் என்னனு தெரியுமா? அவ எனக்கு அடங்கவே மாட்டா மச்சி” என படம் முழுவதும் இருக்கும் வசனங்கள் அனைத்தும் இன்றைய இளைஞர்களும் சரளமாக வரும்.
5/6

சந்தானத்துடன் சேர்ந்து ரேடியோ நிகழ்ச்சிக்கு போன் செய்து அனுயாவை கலாய்ப்பது, கோபத்தில் பைக்கை முறுக்குவது, வாட்ச்மேனுக்கு முத்தம் கொடுப்பது, காதலி வீட்டுக்கு மதுபாட்டிலை டெலிவரி செய்வது, காதலியை சந்திக்க குடும்பத்துடன் செல்வது, கிளைமேக்ஸில் காதலி வீட்டில் உள்ள சின்ன குழந்தை காலில் விழுவது போன்ற காட்சிகள் அல்டிமேட்.
6/6

தமிழ் சினிமாவில் டாம் அண்ட் ஜெர்ரி காதல் கதையை படமாக காட்டிய சிவா மனசுல சக்தி, வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது.
Published at : 13 Feb 2024 12:04 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement