மேலும் அறிய
Jailer Kaavaalaa Review : பாட்டு காப்பி.. டான்ஸு காப்பி..எல்லாமே காப்பி.. ட்ரால் வலையில் சிக்கிய ஜெயிலரின் காவாலா!
Jailer Kaavaalaa Review : லியோ ஃபர்ஸ்ட் சிங்கிளான நா ரெடி பாடலுக்கு, காவாலா ட்ஃப் கொடுக்கும் என ரஜினியின் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.
தமன்னாவின் காவாலா - ஷக்கீராவின் வக்கா வக்கா
1/6

ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான காவாலா பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது. அனிருத் இசையில் அருண்ராஜா காமராஜ் வரிகளில் ஜானி மாஸ்டரின் நடனத்தில் உருவான இப்பாடல் எப்படி இருக்கு என்று பார்க்கலாம் வாங்க..
2/6

முதலில் வரும் புல்லாங்குழல் இசை கேட்க சற்று வித்தியாசமாக இருக்கிறது. இப்பாடல் படம்பிடிக்கப்பட்ட ட்ரைபல் செட் சிறுவயதில் விளையாடிய டெம்பிள் ரன் கேமை நினைவிற்கு கொண்டு வருகிறது. தமன்னாவின் ஆடை வடிவமைப்பு, சிகை அலங்காரம் என அனைத்தும் 2010ல் வெளியான வக்கா வக்கா பாடல் ஷக்கீராவை இன்ஸ்பயர் செய்தது போல் உள்ளது.
3/6

ஹலமதி ஹபிபோவில் வரும் ஜிபரிஷ் வார்தைகளை போல், இப்பாடலின் இடையில் தெலுங்கு வார்தைகள் இடம்பெற்றுள்ளன.
4/6

அடுத்தது ஜானி மாஸ்டரின் நடனத்தை நெட்டிசன்ஸ் அனைவரும் ட்ரால் செய்து வருகின்றனர். ‘இடுப்பை வைத்து ரெண்டு ஸ்டெப், கைகளை வைத்து நாலு ஸ்டெப் ஆகமொத்தம் ஒரே மாதிரியான நடன அசைவுகளை மீண்டும் மீண்டும் போட்டு இருக்கிறார் ஜானி மாஸ்டர்’,‘மார்ச் பாஸ்ட் செய்வது போல் ஒரு அசைவு இருக்கிறது..’என சில வேடிக்கையான கமெண்டுகள் இணையத்தில் இடம்பெற்றுவருகிறது.
5/6

ஷில்பா ராவின், ரா ரா ரா ரா ஹம்மிங், கொஞ்சம் பாட்டு காவாலா கொஞ்சம் டான்ஸு காவாலா போன்ற வரிகள் கேட்க நன்றாக இருக்கிறது.
6/6

இசையமைப்பாளர் அனிருத்தின் இசையை பற்றி சொல்லாமல் இருந்தால் எப்படி? லியோ ஃபர்ஸ்ட் சிங்கிளான நா ரெடி பாடலுக்கு, காவாலா ட்ஃப் கொடுக்கும் என ரஜினியின் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். சிலர், ஊ சொல்றியா பாடலுக்கு இணையாக இது ஹிட்டாகும் என பகல் கனவு கண்டனர். ஆனால் இது இரண்டுமே நடக்கவில்லை என்பதுதான் உண்மை. போக போக இந்த பாடல் இளசுகளின் ப்ளே லிஸ்டில் இணையலாம்.
Published at : 07 Jul 2023 12:12 PM (IST)
மேலும் படிக்க





















