மேலும் அறிய

CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விலங்குகளிடம் பாதுகாப்பாக நடந்துகொள்வது எப்படி, எதிர்பாராமல் நாய் கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்து பள்ளிகள் விழிப்புணர்வு வகுப்புகளை நடத்த வேண்டும்.

பள்ளிகளில் நாய்க் கடி சம்பவங்களைத் தடுக்கவும், மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அனைத்துப் பள்ளிகளுக்கும் மிக முக்கியமான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அண்மையில் உச்ச நீதிமன்றம் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சமீபகாலமாகப் பள்ளி வளாகங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் நாய்க் கடிச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே, பள்ளிகளில் மாணவர்களின் முழுமையான நல்வாழ்வை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிபிஎஸ்இ கறாராக உத்தரவிட்டுள்ளது.

சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்களுக்கு விலங்குகளிடம் பாதுகாப்பாக நடந்துகொள்வது எப்படி, எதிர்பாராத விதமாக நாய் கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் மற்றும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கும் முறைகள் குறித்து பள்ளிகள் விழிப்புணர்வு வகுப்புகளை நடத்த வேண்டும். உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து, பள்ளி வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு

  • வளாகப் பாதுகாப்பு: பள்ளி வளாகத்தைச் சுற்றிப் போதுமான வேலிகள் (Fencing), உறுதியான எல்லைச் சுவர்கள் மற்றும் வாயில்கள் இருப்பதை உறுதி செய்து, பள்ளியைப் பாதுகாப்பான பகுதியாக மாற்ற வேண்டும்.
  • நோடல் அதிகாரி நியமனம்: பள்ளியின் தூய்மை மற்றும் பராமரிப்பைக் கண்காணிக்க ஒரு பிரத்யேக 'நோடல் அதிகாரியை' (Nodal Officer) நியமிக்க வேண்டும். அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களைப் பள்ளி நுழைவாயிலில் அனைவரும் பார்க்கும் வகையில் ஒட்டி வைக்க வேண்டும்.
  • காலாண்டு ஆய்வு: பள்ளி வளாகத்திலோ அல்லது அருகாமையிலோ தெரு நாய்கள் தங்குவதற்கு ஏதுவான இடங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த, குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை

உணவுக் கழிவுகள் நாய்களை ஈர்க்கும் என்பதால், பயனுள்ள கழிவு மேலாண்மை மற்றும் முறையான வடிகால் அமைப்புகளைப் பள்ளிகள் நடைமுறைப்படுத்த வேண்டும். சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ரேபிஸ் ஒழிப்பு நடவடிக்கைகளைப் பள்ளிகள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். மேலும், மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை வெளியிட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOP) பின்பற்றிச் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறும் பள்ளிகள் மீது நடவடிக்கை

இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பான கல்விச் சூழலை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
Embed widget