Gambhir BCCI: கம்பீரை கழற்றிவிடும் முடிவில் பிசிசிஐ? ”நீங்க கோச்சா வரணும்” லெஜண்டை சந்தித்து பேச்சுவார்த்தை?
Gambhir BCCI: கவுதம் கம்பீருக்கு மாற்றாக முன்னாள் ஜாம்பவான் ஒருவரை இந்திய அணியின் பயிற்சியாளராக்க, பிசிசிஐ பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Gambhir BCCI: கவுதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் 2025ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் மிகவும் மோசமானதாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவிற்கு மோசமாக அமைந்த 2025:
இந்திய கிரிக்கெட் அணிக்கும், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் 2025ம் ஆண்டு இனிமையான ஆனாலும் மறக்க வேண்டிய ஒரு மோசமான ஆண்டாக அமைந்துள்ளது. டி20 எடிஷன் ஆசியக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி ஆகியவற்றை வெற்றி பெற்றாலும், பார்டர் - கவாஸ்கர் மற்றும் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான உள்ளூர் தொடர் ஆகிய டெஸ்ட் போட்டிகளில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. கம்பீர் பயிற்சியின் கீழ் கடந்த ஆண்டு, நியூசிலாந்து அணிக்கு எதிரான உள்ளூர் தொடரில் 3-0 என படுதோல்வியை சந்தித்த நிலையில், நடப்பாண்டில் தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரை 2-0 என இந்தியா இழந்தது. டெஸ்ட் போட்டிகளில் கண்ட இந்த மோசமான தோல்வியானது, கம்பீரின் பயிற்சி தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
விவிஎஸ் லட்சுமணனை அணுகிய பிசிசிஐ?
இந்த குழப்பமான சூழலுக்கு மத்தியில் கம்பீருக்கான மாற்றை பிசிசிஐ தேட தொடங்கியுள்ளதாக, PTI நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, “தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான தொடரில் வெற்றிக்கு அருகில் கூட செல்ல முடியாமல் சரணடைந்து இந்திய அணி படுதோல்வி அடைந்த பிறகு, பிசிசிசி அமைப்பைச் சேர்ந்த முக்கிய பிரமுகர், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் விவிஎஸ் லட்சுமணனை அணுகினார். தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு வர உங்களுக்கு விருப்பமா? என கேட்டுள்ளார். ஆனால், பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் அகாடெமியின் தலைவராக இருப்பதே தனக்கு போதும் என லட்சுமணன் தெரிவித்துள்ளார்” PTI செய்தி வெளியிட்டுள்ளது.
கம்பீரை கழற்றிவிடும் பிசிசிஐ?
பிசிசிஐ மற்ற வாய்ப்புகளை பரிசீலிக்க தொடங்கினாலும், 2027ம் ஆண்டு கம்பீர் பயிற்சியாளராக தொடர்வார் என்பது உறுதியாக கூறப்படுகிறது. பிசிசிஐ நிர்வாகி ஒருவருடன் பேசியதாக என்டிடிவி வெளியிட்டுள்ள செய்தியில், :லட்சுமணனுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளவில்லை. கம்பீர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளத” என தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால், இந்திய அணியில் எப்போது என்ன மாற்றம் நிகழும் என யாராலும் எதிர்பார்க்க முடியாது. உதாரணம் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படுவார் என யார் எதிர்பார்த்தார்கள் அல்லது டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து அவர் விடுவிக்கப்படுவார் என யார் கருதினார்கள்?
கம்பீர் தொடர வாய்ப்பு?
பிடிஐ செய்தியின்படி, பிசிசிஐயுடனான கம்பீரின் ஒப்பந்தம் 2027 ஒருநாள் உலகக் கோப்பை முடியும் வரை நீடிக்கும். ஆனால் வரும் பிப்ரவரியில் தொடங்கும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் செயல்திறனைப் பொறுத்து அது மீண்டும் நீட்டிக்கப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் மீதமுள்ள ஒன்பது டெஸ்ட் போட்டிகளுக்கு, தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் சரியான நபரா என்பது குறித்தே பிசிசிஐ தற்போது சந்தேகம் கொண்டுள்ளதாக தெரிகிறது. 2026 ஆகஸ்ட்டில் இலங்கைக்கு எதிராகவும், அக்டோபரில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டும் தலா இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. பின்னர் 2027 ஜனவரி-பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.




















