மேலும் அறிய

Jana Nayagan Audio Launch: ”30 வருஷத்துக்கு இதுதான் ப்ளான்” விமர்சனங்களுக்கு பதிலடி தந்த ஜனநாயகன் விஜய்

Jana Nayagan Audio Launch TVK Vijay: அடுத்த 30 ஆண்டுகளுக்கு மக்களுடன் நிற்கப்போவதாக, ஜனநயாகன் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

Jana Nayagan Audio Launch TVK Vijay:  வரும் 2026ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு மீண்டும் நடிக்கச் சென்றுவிடுவார் என்ற விமர்சனங்களுக்கு, தவெக தலைவர் விஜய் பதிலடி தந்துள்ளார்.

 சினிமாவை விட்டு விலகும் விஜய்:

வசூல் அடிப்படையில் தமிழ் சினிமாவின் உச்சபட்ச நிலையை எட்டியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியுள்ளார். இதன் காரணமாக ஜனநாயகன் படமே தனது நடிப்பில் வெளியாகும் கடைசி படம் என்றும் அறிவித்தார். அதேநேரம், விஜயால் அரசியலால் சாதிக்க முடியாது, சிரஞ்சீவி போன்ற மற்ற நடிகர்களைப் போலவே அரசியலில் தோற்றதும் மீண்டும் சினிமாவிற்கே சென்று நடிக்க ஆரம்பித்து விடுவார் என பல்வேறு அரசியல் கட்சியினரும் விமர்சிக்க தொடங்கினார். ஜனநாயகன் படத்தில் நடித்துள்ள மமிதா பைஜு, விஜயின் ஓய்வு தொடர்பாக பேசியதும் பல சந்தேகங்களை எழுப்பியது. அதாவது படப்பிடிப்பின்போது நீங்கள் மீண்டும் நடிப்பீர்களா என அவர் கேட்டதாகவும், அதற்கு 2026 தேர்தலுக்கு பிறகு தான் தெரியும் என விஜய் சொன்னதாகவும் மமிதா ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டு இருந்தார். இதனை கொண்டும் பலரும் விஜயை விமர்சிக்க தொடங்கினர்..

விஜய் மீது அரசியல் தாக்குதல்:

தேர்தலில் தோற்றால் விஜய் மீண்டும் நடிக்கச் சென்றுவிடுவார் என்ற விமர்சனம் மூலம், அவர் நிலையற்றவர், நம்பகத்தன்மையற்ற தலைவர், அவருக்கு வாக்களிப்பது எந்தவித பயனுமற்றது என்பது போன்ற பிம்பத்தை உருவாக்க முயன்றனர். ஆனாலும், இதுபோன்ற விமர்சனங்களுக்கு விஜய் நேரடியாக எந்தவித பதிலும் அளிக்காமல் இருந்தார். பல நடிகர்கள் அரசியலுக்கு வந்து, வருவேன் என கூறி ஏமாற்றம் அளித்ததை போல, விஜயும் பத்தோடு பதினொன்றாக மாறிவிடுவாரோ? என்ற சந்தேகம் பொதுமக்களிடமும் இல்லாமல் இல்லை. இந்நிலையில் தான், மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில், தனது அரசியல் பயணத்திற்கான திட்டத்தை விஜய் உறுதிபட தெரிவித்துள்ளார்.

”30 ஆண்டுகள் இதுதான் ப்ளான்”

நிகழ்ச்சியில் பேசிய விஜய், “எனது திரைப்பட வாழ்க்கையின் முதல் நாளிலிருந்தே நான் எல்லா வகையான விமர்சனங்களையும் எதிர்கொண்டேன். ஒரு சிறிய மணல் வீட்டை கட்ட விரும்பினேன். ஆனால், ரசிகர்கள் எனக்கு அரண்மனையை கொடுத்தனர்.  33 ஆண்டுகளாக ஆதரவாக இருப்பது எளிதல்ல, ஆனால் என் ரசிகர்கள் அதை எனக்குச் செய்தார்கள். அதுவே எனது மிகப்பெரிய பலம். அதற்காக நான் வெறும் நன்றி சொல்ல விரும்பவில்லை. அவர்கள் எனக்காக நின்றார்கள். அவர்களுக்காக அடுத்த 30-33 வருடங்களுக்கு  நிற்க போறேன், வெறும் நன்றி என்ற வார்த்தைகளால் மட்டுமல்ல, செயல் மூலம் கடனைத் திருப்பிச் செலுத்துவதன் மூலமும் அவர்களுடன் இருக்கப்போகிறேன். இந்த விஜய் ரசிகர்களுக்காக, சினிமாவிலிருந்து விலகுகிறேன்” என உணர்ச்சிப்பொங்க பேச அந்த ஒட்டுமொத்த மைதானமும் ரசிகர்களின் முழக்கத்தால் அதிர்ந்தது. இதன் மூலம் வெற்றி தோல்வியை தாண்டி இனி முழு நேரமும் அரசியல் பயணத்தை மேற்கொள்ளப்போவதை உறுதி செய்து, விமர்சனங்களுக்கு விஜய் பதிலடி தந்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
Embed widget