Jana Nayagan Audio Launch: ஒன் லாஸ்ட் டைம்..! அரங்கம் அதிர, விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி - ஜனநாயகன் சம்பவம்
Jana Nayagan Audio Launch Vijay Kutty Story: ஜனநாயகன் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Jana Nayagan Audio Launch Vijay Kutty Story: ஜனநாயகன் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில், பிறருக்கு உதவுவது தொடர்பான குட்டி ஸ்டோரியை விஜய் தெரிவித்துள்ளார்.
விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி
அரசியல் நுழைவை தொடர்ந்து விஜயின் கடைசி திரைப்படம் என்ற அடையாளத்துடன், ஜனநாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது. எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் மற்றும் பிரகாஷ் ராஜ் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ள, படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று மலேசியாவில் பிரமாண்டமாக அரங்கேறியது. ஒவ்வொரு முறை தனது திரைப்பட இசைவெளியீட்டின் போதும், விஜய் தனது ரசிகர்களுக்கு ஒரு குட்டிக் கதை சொல்வது வழக்கம். இந்நிலையில் தான், தனது கடைசி படத்தின் இசைவெளியீட்டு விழாவில் என்ன குட்டிக் கதையை விஜய் சொல்லப்போகிறார் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். அதன்படி, பிறருக்கு உதவுவது தொடர்பான கதையை அவர் சொல்லியிருக்கிறார்.
ஒன் லாஸ்ட் டைம் - விஜய் சொன்ன குட்டிக் கதை
ஒரு குட்டிக் கதை என குறிப்பிட்டு பேச தொடங்கிய விஜய், “ஒரு ஆட்டோகாரர், கர்ப்பிணி பெண்ணை ஏற்றிக்கொண்டு செல்கிறார். அப்போது மிகப்பெரிய அளவில் மழை பெய்துகொண்டு இருக்க, ஆட்டோக்காரர் தன்னிடம் இருந்து குடையை அந்த பெண்ணுக்கு கொடுத்து எடுத்துச் செல்லுங்க்ள் என வலியுறுத்துகிறார். இதை நான் யாரிடம் திருப்பிக் கொடுப்பது என அந்தப் பெண் கேட்கிறார். அதற்கு யாராவது தேவைப்படுபவர்களை பார்த்தால் கொடுங்கள் என ஆட்டோக்காரர் சொல்கிறார். இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற அந்த பெண், அங்கு வாசலில் மழைக்கு பயந்து நின்றுகொண்டிருந்த ஒரு பெரியவருக்கு குடையை கொடுத்து எடுத்துட்டு போகச் சொல்கிறார்.
அந்த பெரியவரோ நீங்கள் யாரென்ரே எனக்கு தெரியாது. இதை யாரிடம் திருப்பி கொடுப்பது என கேட்க, தேவைப்படுபவர்களுக்கு கொடுங்கள் என கூறிவிட்டு அந்த கர்ப்பிணி பெண் அங்கிருந்து சென்றுவிடுகிறார். அந்த பெரியவரும் குடையை பயன்படுத்திக்கொண்டு பேருந்து நிலையம் பக்கம் செல்கிறார்.
அங்கு பூ விற்கும் ஒரு அம்மாவிடம் அவர் அந்த குடையை கொடுக்க, அந்த பெண்மணி மற்றொரு சிறுவனிடம் குடையை கொடுத்து மழையில நனையாமல் செல்ல வலியுறுத்துகிறார். அந்த சிறுவன் குடையோட வீட்டுக்குப் போக, வீட்டிலோ தனது மகன் குடையின்றி நனைந்தபடி வருவானோ என அவரது தந்தை வருந்திக் கொண்டிருக்கிறார். அந்த அப்பா வேறு யாருமில்லை, அவர்தான் ஆட்டோக்காரர். சிறுவன் கொண்டு வந்த குடை அவர் கொடுத்த குடைதான். முடிந்த வரைக்கும் சின்ன சின்ன உதவிகள் செய்து பாருங்கள், வாழ்க்கை சுவாரஸ்யமா இருக்கும்” என பேசி விஜய் தனது குட்டி ஸ்டோரியை பூர்த்தி செய்தார்.
விஜய் சொன்ன தத்துவம்..
அதோடு, வெற்றிக்கான ரகசியம் ஒன்றையும், ஜனநாயகன் இசைவெளியீட்டு விழா மேடையில் விஜய் பகிர்ந்து கொண்டார். அதன்படி, ”வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு நண்பர்கள் அவசியமாக தேவைப்படமாட்டார்கள். ஆனால், வலுவான போட்டியாளர்கள் கட்டாயம் தேவைப்படுவார்கள். அவர்கள் தான் நீங்கள் வலுவான நபராக வளர்ச்சிபெற உதவுவார்கள். 2026 ஆம் ஆண்டு வரலாறு மீண்டும் நிகழும். மக்களுக்காக அதை ஏற்றுக்கொள்ள அனைவரும் தயாராக இருக்க வேண்டும்” நடிகர் விஜய் தனது உரையை பூர்த்தி செய்தார். இதனை கண்டு ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களின் மனமும் கனத்து போக, மழையும் பெய்து இயற்கையும் அவருக்கு பிரியா விடையை கொடுப்பதுபோன்று உணர்ச்சிப்பூர்வமாக நிகழ்ச்சியும் முடிவுற்றது..





















