மேலும் அறிய
CM Stalin in Spain : ஸ்பெயின் நாட்டில் சூரிய உதயம்...மாஸ் போஸ் கொடுக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின்!
CM Stalin in Spain : முதலீடுகளை ஈர்பதற்காக அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலினின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின்
1/5

முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்க அரசுமுறை பயணமாக ஸ்பெயின் சென்றுள்ளார்.
2/5

முன்னதாக பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளின் போது, அவரது திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
3/5

12-ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் வரைவில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும், 19-ஆம் நாள் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கை குறித்தும் நிதித்துறை முதன்மைச் செயலாளர், வளர்ச்சித்துறை ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஸ்பெய்னில் இருந்து காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
4/5

இந்நிலையில் ஸ்டைலிஷான ஆடை அணிந்து ஸ்பெயினில் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
5/5

ஸ்பெயினில் உள்ள மேட்ரிட் பகுதியில் சூரிய உதயத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன், “Spain, where dawns are dreams” என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.
Published at : 05 Feb 2024 11:44 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion