மேலும் அறிய
Nagesh Rare Photos: ’காலங்களுக்கும் அவன் கலைஞன்!’ - நகைச்சுவை நாயகன் நாகேஷ் பிறந்ததினம்
நகேஷ்
1/9

தமிழ் சினிமா நகைச்சுவை வரலாற்றை இரு கூறாய் போடவேண்டுமென்றால் அது நாகேஷுக்கு முன், பின் என்றுதான் வரையறுக்கமுடியும்.
2/9

இயக்குநர் ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை (1963) படத்தில் மனோரமா வீட்டுக்குள் புகுந்து அவரை காதலிக்க முற்படும்போது மனோரமாவின் அண்ணனாக வரும் ஜெமினி பாலகிருஷ்ணனிடம் நாகேஷ், உடல் மொழியோடு பேசும் வசன வித்தை, அதுவரை தமிழ்த் திரையுலகம் காணாத ஒன்று.
3/9

நாகேசுக்கு இயற்பெயர் குண்டுராவ். தாராபுரத்தில் ஒரு ரயில்வே ஊழியரின் மகன்.
4/9

பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்து தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருந்த போதுதான் அம்மை வந்து முகமே மாறியது
5/9

1959-ல் வெளியான தாமரைக்குளம் படத்தில் நாகேஷுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததாக இயக்குர் தயாரிப்பாளர் முக்தா வி சீனுவாசன் சொல்வார். ஆனால் அதற்கு முன்போ பாலாஜி கதாநாயகனாக நடித்த மானமுள்ள மறுதாரம் (1958) படத்தில் நாகேஷ் நடித்துவிட்டார் என்ற விவரமும் உண்டு
6/9

அவருக்கு மிகப்பெரிய பிரேக் என்றால் அது ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை (1962) படம்தான்
7/9

எம்ஜிஆருடன் பணத்தோட்டம், பெரிய இடத்துப்பெண் என இரண்ட படங்களில் வாய்ப்பு, பணத்தோட்டம் படத்தில்
8/9

அதன்பின் காதலிக்க நேரமில்லை, எங்கவீட்டு பிள்ளை, திருவிளையாடல், ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா,அதே கண்கள், ஊட்டி வரை உறவு, தில்லானா மோகனாம்பாள், வசந்தமாளிகை என தமிழ் சினிமாவின் காவியங்கள் அனைத்திலும் இவரின் பாத்திரங்கள் நாயகன்களுக்கு அப்படியொரு சவால் கொடுத்தவை.
9/9

நீர்க்குமி்ழி, சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல் போன்றவையெல்லாம் நாகேஷின் தனி ஆவர்த்தனத்திற்காகவே எடுக்கப்பட்டவை. லோ பட்ஜெட்டில் இயக்குநர் கே.பாலசந்தருக்கு அடுத்தடுத்து கைகொடுத்து ஏற்றிவிட்ட ஏணி நாகேஷ்தான்.
Published at : 27 Sep 2021 03:24 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement