மேலும் அறிய
Mollywood movies : பேக் டூ பேக் ஹிட்.. ரசிகர்களை கவர்ந்து வரும் மலையாள சினிமா!
Mollywood movies : மலையாள சினிமா என்றுமே கன்டென்டுக்கு பெயர் போனது. ஒன் லைன் திரைக்கதையை ரசிக்க வைக்கும் படி குறைந்த பட்ஜெட்டில் கொடுப்பதில் திறமையானவர்கள்.

மலையாள சினிமா
1/6

இயக்குநர் ராகுல் சதாசிவன் - மம்மூட்டி கூட்டணியில் ஹாரர் த்ரில்லர் ஜானரில் பான் இந்தியன் படமாக வெளியானது 'பிரம்மயுகம்'.
2/6

சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. 2006ம் கொடைக்கானலில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.
3/6

கிரீஷ் ஏ.டி இயக்கத்தில் நஸ்லென் கே. கஃபூர் மற்றும் மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பில் ரோம்-காம் வடிவில் வெளியான 'பிரேமுலு' திரைப்படம் இளைஞர்களின் மனைகளை கட்டி இழுத்தது.
4/6

இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'மலைக்கோட்டை வாலிபன்' திரைப்படம் வெளியானது.
5/6

மிதுன் மானுவல் தாமஸ் இயக்கத்தில் ஜெயராம் நடிப்பில் கில்லர் த்ரில்லர் ஜானரில் வெளியான வெளியான 'ஆபிரகாம் ஓஸ்லர்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
6/6

பிளெஸ்ஸி இயக்கத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆடு ஜீவிதம்'. இப்படம் மார்ச் 28ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் மூலம் 30 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள திரையுலகில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான் .
Published at : 29 Feb 2024 12:49 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement