மேலும் அறிய
Kalaignar 100 : 'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை..எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' - கருணாநிதியின் கலை வாழ்க்கை !
தனது வாழ்க்கையில் 65 ஆண்டு காலத்தை சினிமாவுக்கு அற்பணித்த கலைஞரின் படைப்புகளை பற்றி பார்க்கலாம்.

கருணாநிதியின் அரிதான புகைப்படங்கள்
1/6

தனது சிறு வயது காலம் முதலே தமிழ் மீது அளவு கடந்த பற்று கொண்டவருக்கு திரைத்துறையில் முதல் வாய்ப்பாக அமைந்தது எம்.ஜி.ஆரின் 'ராஜகுமாரி' படம். இப்படத்தில் வசனகர்த்தாவாக தன் வாழ்க்கையை தொடங்கினார் கருணாநிதி.
2/6

அதனை தொடர்ந்து ஏராளமான படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றினார். அதில் மறக்க முடியாத ஒரு படம் 'பராசக்தி'. இதில் இவர் எழுதிய வசனங்கள் இன்றளவும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
3/6

1940 - 50 காலகட்டங்களில் உருவான தமிழ் சினிமாவில் இடம்பெற்ற வசனங்களில் சமஸ்கிருதம், தெலுங்கு வார்த்தைகளை சேர்க்காமல், எளிமையான வசனங்களை அனைவருக்கும் புரியும் படி எழுதியவர் கருணாநிதி.
4/6

தமிழ் சினிமாவில் 69 படங்களில் பணியாற்றிய கருணாநிதி தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அதிலும் மனோகரா மற்றும் பராசக்தி படங்கள் அவரின் மிக சிறந்த படைப்புகளாகும்.
5/6

அவரின் பெரும்பாலான படைப்புகளில் சமூக அக்கறை கொண்ட கருத்துகள், தீண்டாமை, சுயமரியாதை திருமணங்கள், சமூக பிரச்சனைகள், மூட நம்பிக்கைகள் பற்றிய கருத்துக்கள் இடம் பெற்று இருக்கும். மிகவும் ஆழமாக உடைத்து பேசும் வழக்கை தமிழ் சினிமாவில் கொண்டுவந்தவர்.
6/6

'கலைஞர்' என்ற பட்டத்தை கருணாநிதிக்கு வழங்கியவர் எம்.ஆர். ராதா. இவ்வுலகை விட்டு இவர் பிரிந்தாலும் அன்று முதல் இன்று வரை அனைவராலும் கலைஞர் என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.
Published at : 02 Jun 2023 12:41 PM (IST)
\
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion