Maruti Electric MPV: மாருதியின் முதல் மின்சார எம்பிவி ஆன் தி வே - என்ன எதிர்பார்க்கலாம்? எப்படி இருக்கும்?
Maruti Electric MPV 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்த ஆண்டின் இறுதியில், தனது முதல் மின்சார எம்பிவி கார் மாடலை அறிமுகப்படுத்த மாருதி சுசூகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Maruti Electric MPV 2026: மாருதி சுசூகியின் முதல் மின்சார எம்பிவி கார் மாடல் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
மாருதியின் முதல் மின்சார எம்பிவி:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மாருதி சுசூகி நிறுவனம் தனது முதல் மின்சார காரான, இ-விட்டாராவை அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. அதன் தொடர்ச்சியாக முற்றிலும் புதிய மின்சார எம்பிவியின் மீது நிறுவனம் பணியாற்றி வருவதாகவும், அடுத்த ஆண்டின் இறுதியில் அந்த கார் சந்தைப்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. YMC என்ற கோட்நேமை கொண்டுள்ள இந்த கார், இந்திய சந்தையில் ப்ராண்டின் இரண்டாவது மாடலாக இருக்கும்.
மாருதி மின்சார எம்பிவி - பேட்டரி ஆப்ஷன்கள்:
பிரதான பவர்ட்ரெயின் அம்சங்களை இ-விட்டாராவில் இருந்து இந்த எம்பிவி அப்படியே பின்தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, இ-விட்டாரா கட்டமைக்கப்பட்டுள்ள 27PL ஸ்கேட்போர்ட் ப்ளாட்ஃபார்மில் தான், புதிய எம்பிவியும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாம். பல்வேறு கார் மாடல்களுக்கான உடலமைப்பை கட்டமைப்பதற்காக, இந்த போர்ன் இவி ப்ளாட்ஃபார்மானது மாருதி சுசூகி மற்றும் டொயோட்டா நிறுவனத்தால் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது. YMC எம்பிவியில் இடம்பெறக்கூடிய பேட்டரி ஆப்ஷன்கள் தொடர்பான தகவல்கள் இல்லாவிட்டாலும், விரைவி அறிமுகமாகக் கூடிய இ-விட்டாராவில் உள்ள 49 kWh மற்றும் 61 kWh பேட்டரி பேக் ஆப்ஷன்கள் அப்படியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக, 543 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் கான்ஃபிகரேஷனும் வழங்கப்படலாம்.
மாருதி மின்சார எம்பிவி - அறிமுகம் எப்போது?
இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள் உண்மையானால், மாருதி சுசூகியின் முற்றிலும் புதிய மின்சார எம்பிவி ஆனது அடுத்த ஆண்டு செப்டம்பரில் விற்பனைக்கு கொண்டு வரப்படக்கூடும். ஆனல, இந்த காரின் மாடல்கள் ஏதும் இதுவரை சோதனையில் எங்கும் கண்டறியப்படவில்லை. இதனால், அந்த காருக்கான சோதனைகள் ஏதும் தொடங்கவில்லை என கூறப்படுகிறது. சந்தைக்கு கொண்டுவரப்பட்டால் இந்த காரானது, உள்நாட்டில் கியா காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார எடிஷனுக்கு எதிராக போட்டியிடும்.
எம்பிவி பிரிவை ஆளும் மாருதி:
குறிப்பிட்ட செப்டம்பர் மாதத்திற்கு முன்பாகவே, சுசூகியின் ஸ்பேஸியா அடிப்படையிலான ஹைப்ரிட் காம்பேக்ட் எம்பிவி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டால், புதிய மின்சார காரானது ஒட்டுமொத்தமாக ப்ராண்டின் ஐந்தாவது எம்பிவி ஆக அடையாளம் காணப்படும். ஏற்கனவே மாருதி நிறுவனமானது அதிகப்படியாக விற்பனையாகும் எர்டிகா மூலம், எம்பிவி பிரிவில் முதன்மையான ப்ராண்டாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த காரானது வாடகை கார் ஓட்டுனர்கள் இடையே மிகவும் பிரபலமானதாக உள்ளது.
இந்நிலையில் புதிய YMC மின்சார MPV மூலம், நிறுவனம் பெரும்பாலும் பிரிவின் பிரீமியம் நிலை தேவைகளை பூர்த்தி செய்ய விரும்புகிறது. ஏனெனில் அதன் தற்போதைய MPV விற்பனையில் பெரும்பாலானவை வணிக பயன்பாட்டிற்கு செல்கின்றன. அறிமுகப்படுத்தப்பட்டவுடன், YMC விலை நிர்ணயம் அடிப்படையில் தற்போதுள்ள எர்டிகா மற்றும் XL6 ஐ விட உயர்ந்ததாக இருக்கும். மேலும் இது ஒரு நவீன வடிவமைப்பையும், பிரீமியம் மற்றும் தொழில்நுட்பம் நிறைந்த கேபினையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















