மேலும் அறிய
Indraja Shankar Baby Shower: ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவுக்கு பிரமாண்டமாக நடந்த வளைகாப்பு! வைரலாகும் போட்டோஸ்!
Indraja Shankar Baby Shower: ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ஷங்கர் கர்ப்பமாக உள்ள நிலையில், அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இது புகைப்படங்கள்இதோ.

இந்திரஜா ரோபோ ஷங்கரின் வளைகாப்பு புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது
1/10

அதிக அளவில் படித்திருந்தாலும், சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரை துறையை தேர்வு செய்து அதில் ஜெயிக்க பல கஷ்டங்களை கடந்து வருகின்றனர் சில பிரபலங்கள். அப்படி எம் ஏ எக்னாமிக்ஸ் படித்த போதிலும், நடிகராக வேண்டும் என தன்னுடைய இளம் வயதிலேயே முடிவு செய்து அதற்காக பாடுபட்டவர் தான் காமெடி நடிகர் ரோபோ சங்கர்.
2/10

'தர்மசக்கரம்' திரைப்படத்தின் மூலம், சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலப்படுத்தியது சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தான்.
3/10

2012 -ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு ' என்கிற நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக மாறிய ஷங்கர், பின்னர் ரோபோ ஷங்கராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
4/10

'கலக்க போவது யாரு' நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தால், அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்பபை பெற்றார். அந்த வகையில் யாருடா மகேஷ் திரைப்படத்தில் இவர் நடித்த கோபால் கதாபாத்திரம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
5/10

இதைத்தொடர்ந்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், கப்பல், மாரி, ஸ்ட்ராபெரி, புலி, விசுவாசம், என பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார்.
6/10

காமெடி நடிகர் என்பதைத் தாண்டி, குணச்சித்திர வேடத்திலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்த கூடியவர் ரோபோ ஷங்கர். மேலும் டப்பிங் ஆர்டிஸ்ட், பாடகர், என பன்முக திறமையாளராக அறியப்படுகிறார். அதே போல் ஆண் அழகன் போட்டியில் கலந்து கொண்டு பல விருதுகளை பெற்றுள்ளார் ரோபோ ஷங்கர்.
7/10

ரோபோ ஷங்கரை தொடர்ந்து, இவருடைய மகள் இந்திரஜா ஷங்கரும் தமிழ் சினிமாவில் நடிகையாக அறியப்படுகிறார். 2019 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தில் பாண்டியம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
8/10

இதைத்தொடர்ந்து 'பாகல்' என்கிற தெலுங்கு படத்திலும், கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர் தமிழ் சீசன் 1' நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு 15 வது நாளில் வெளியேற்றப்பட்டார்.
9/10

இந்திரஜாவுக்கு பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்து வந்த போதிலும், கல்லூரி படிப்பை முடித்த கையோடு குடும்ப நண்பரான தன்னுடைய மாமா கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்திரஜா. கணவரோடு சேர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் 'சின்னத்திரை சீசன் 5' நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டார். ஆனால் நிகழ்ச்சி துவங்கிய ஒரே மாதத்தில் தன் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை அறிவித்தார். கர்பமானதால் இந்த நிகழ்சியில் இருந்து வெளியேறினார்.
10/10

தற்போது இந்திரஜா ஏழு மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், அவருக்கு பெற்றோர் மற்றும் கணவர் வீட்டார் வளைகாப்பு நடத்தி அழகு பார்த்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இவருடைய வளைகாப்பு நிகழ்ச்சியில், ஏராளமான பிரபலங்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். வழக்கமாக வளைகாப்பு நிகழ்ச்சியில், கலவை சாதங்கள் பரிமாறப்படும் நிலையில், இந்திரஜா ரோபோ ஷங்கர் வளைகாப்பில் கறி விருந்து கருக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 08 Dec 2024 06:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
அரசியல்
அரசியல்
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion