மேலும் அறிய
Keerthy Suresh Photos இரண்டு நாளில் திருமணம்; 'FACE' மேகசீனுக்கு கீர்த்தி சுரேஷ் நடத்திய ஹாட் போட்டோ ஷூட் வைரல்!
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ஹாய்யாக இவர் மேகசீனுக்கு போட்டோ ஷூட் செய்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

கீர்த்தி சுரேஷின் போட்டோ ஷூட் புகைப்படங்கள்
1/12

மலையாள திரையுலகை சேர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய 32 வயதில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
2/12

கீர்த்தி சுரேஷுக்கு இவருடைய நீண்ட நாள் காதலரான, ஆண்டனி தட்டில் என்பவருக்கும் டிசம்பர் 12-ஆம் தேதி கோவாவில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
3/12

கீர்த்தி திருமணம் செய்துகொள்ள உள்ள ஆண்டனி தட்டில், பள்ளி காலங்களில் இருந்தே கீர்த்தி சுரேஷுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்.
4/12

கல்லூரியில் ஒன்றாக படிக்கும் போது, இருவரும் காதலிக்க துவங்கினர். கீர்த்தி சுரேஷ் சினிமாவின் பக்கம் கவனம் செலுத்த துவங்கிய நிலையில், ஆண்டனி தட்டில் துபாயில் ஒரு தொழிலதிபராக உயர்ந்தார்.
5/12

கீர்த்தி சுரேஷ் குடும்பத்தை விட பல மடங்கு கோடீஸ்வரரான ஆண்டனி தட்டிலுக்கு, துபாயில் மட்டும் இன்றி கோவா, சென்னை போன்ற இடங்களிலும் சில ஹோட்டல்கள் உள்ளது.
6/12

ஆண்டனி தட்டிலின் சொந்த ஓட்டலில் தான் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு வாரமாகவே நடந்து வருகிறது.
7/12

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ், 'FACE' மேகசீனுக்கு கலக்கலான மாடர்ன் உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். திருமணத்தை நெருக்கத்தில் வைத்து கொண்டு அட்டை படத்திற்கு ஹாட் போட்டோ ஷூட்டா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
8/12

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது.
9/12

நடிகை கீர்த்தி சுரேஷ், மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மலையாள படங்களில் தான் அறிமுகமானார்.
10/12

தமிழில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'இது என்ன மாயம்' என்கிற படத்தில் நடித்தார்.
11/12

இவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது, சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்த மகாநடி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
12/12

பேபி ஜான் திரைப்படம் மூலம் பாலிவுட் திரையுலகிலும் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். அந்த படம் டிசம்பர் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
Published at : 10 Dec 2024 08:48 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
மயிலாடுதுறை
உலகம்
Advertisement
Advertisement