மேலும் அறிய

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!

சபரிமலையில் பக்தர் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று பம்பையில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 10 மணி நேரம் வரை காத்து நின்ற பின்னரே 18 படிகளில் ஏற முடிகிறது.

சபரிமலையில் பக்தர் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று பம்பையில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 10 மணி நேரம் வரை காத்து நின்ற பின்னரே 18 படிகளில் ஏற முடிகிறது. படியில் பக்தர்கள் ஏறுவதை வேகப்படுத்தி நிலைமையை சீராக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.

பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!

சபரிமலையில் நடப்பு மகர விளக்கு கால சீசன் கடந்த டிசம்பர் 30-ம் தேதி மாலை தொடங்கியது. 31-ம் தேதி முதல் நெய்யபிஷேகம் தொடங்கியது. அன்று முதல் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக வரத் தொடங்கியது. பம்பையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் பம்பையில் இருந்து பக்தர்கள் மலை ஏறுவதில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டது. பக்தர்கள் பம்பை மணல் பரப்பில் தடுத்து நிறுத்தப்பட்டு கட்டம் கட்டமாக மலையேற அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் நீலிமலை, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் வழியாக சன்னிதானம் வரும் வழியில் மீண்டும் சரங்குத்தியில் சியூ காம்ப்ளக்ஸ் கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்ட பின்னர் சன்னிதானத்திற்கு அனுப்பப்பட்டனர். இதனால் ஒரு பக்தர் பம்பையில் இருந்து சன்னிதானம் வருவதற்கு 8 முதல் 10 மணி நேரம் வரை ஆவதாக தெரிவித்தனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே மூலிகை குடிநீர், பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டது. இது ஆறுதலாக இருந்தாலும் குழந்தைகளுடன் நீண்ட நேர காத்திருப்பில் இருந்த பக்தர்கள் சிரமப்பட்டனர்.

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!

இதற்கிடையில் 18 படிகளில் பக்தர்களை வேகமாக ஏற்றி நிலைமையை சீராக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஒரு நிமிடத்திற்கு 4000 முதல் 4200 பக்தர்கள் வரை ஏற்றப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். எனினும் வயது முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வரும்போது இதில் தொய்வு ஏற்படுவதாக போலீசார் கூறுகின்றனர். பொதுவாக போலீசாரின் ஒருநாள் பணி மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 18 படிகளில் மட்டும் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டு போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 18 படிகளின் இரு பக்கத்திலும் 15 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 15 நிமிடம் இவர்கள் பணி நேரமாகும் மொத்தம் 6 முறை இவர்கள் படிகளில் பணியில் ஈடுபடுவார்கள். படிகளில் பக்தர்கள் வேகமாக ஏறினால் மட்டுமே வரிசையின் நீளத்தையும், காத்திருப்பு நேரத்தையும் குறைக்க முடியும் என்பதால் அதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget