Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
தேசிய அரசியலில் இருந்து மாநில அரசுக்கு திரும்பும் முடிவை எடுத்துள்ள கனிமொழி, வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது. 4 தொகுதிகளை தேர்வு செய்து மும்முரமாக வேலை நடந்து வருவதாக சொல்கின்றனர்.
முரசொலி மாறன், வைகோ, டி.ஆர்.பாலு, வரிசையில் இன்று நாடாளுமன்றத்தில் திமுகவின் முகமாக மாறியிருக்கிறார் கனிமொழி. நாடாளுமன்ற குழுத் தலைவர், துணைப் பொதுச்செயலாளர் போன்ற பதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனிமொழியிடம் ஒப்படைத்தாலும் மாநிலத்தில் அரசியல் செய்யவே கனிமொழி விரும்புவதாக பேச்சு அடிபடுகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலேயே போட்டியிட கனிமொழி விரும்பியதாகவும் ஆனால், அதற்கான வாய்ப்பு அந்த நேரத்தில் அமையவில்லை என்பதால் வரும் 2026 தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து ஆயத்தப்பணிகளை கனிமொழி ஆரம்பித்து விட்டதாக சொல்கின்றனர்.
அதனால்தான், அவரது பிறந்தநாளான நேற்று அவருக்காக வெட்டப்பட்ட கேக்கில் ’புறம் காத்தது போதும், அகம் காக்க வா’ என்று எழுதி, சட்டப்பேரவை புகைப்படத்தை பொறித்திருந்தனர். சமூக வலைதளங்களிலும் வெளியான வீடியோக்களில் கனிமொழி சட்டப்பேரவைக்கு செல்வது மாதிரியான புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.
தன்னுடைய விருப்பத்தை முக்கிய நிர்வாகிகள் சிலர் மூலமாகவும், மறைமுகமாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கனிமொழி தெரிவித்துவிட்டதாகவும், சில நாட்களில் அவரே நேரடியாக இது பற்றி முதல்வரிடம் பேசவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
அதேபோல் வெற்றி வாய்ப்புள்ள பலமான 4 தொகுதிகளை கனிமொழி தேர்வு செய்து வைத்துள்ளதாகவும் தில் ஒன்று சென்னையில் உள்ள தொகுதி என்றும் கனிமொழிக்கு நெருங்கிய வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அக்கது திருச்செந்தூரும் கனிமொழியின் லிஸ்ட்டில் இருக்கிறதாம். தற்போது திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏவாகவும் அமைச்சராகவும் இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவரை மருத்துவர்கள் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை, இந்த முறை அவர் சீட் வேண்டாம் என்று சொன்னால், திருச்செந்தூர் தொகுதியில் கனிமொழி களமிறங்க வாய்ப்புள்ளதாக சொல்கின்றனர்.
அதோடு, இசுலாமியர்கள் அதிகம் உள்ள நெல்லை பாளையங்கோட்டை தொகுதியில் நின்றால் வெற்றி நிச்சயம் என்பதால், அந்த தொகுதியையும் கனிமொழி தன்னுடைய பரிசீலனையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழக அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் என்பது தற்போது இரண்டாக மட்டுமே உள்ள நிலையில், வரும் தேர்தலில் கனிமொழி MLA ஆகி திமுக தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியமைத்தால் முக்கியமான துறைக்கு கனிமொழி அமைச்சர் ஆக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.





















