மேலும் அறிய
Aranmanai 4:சிறப்பு பாடலுக்கு நடனமாடிய குஷ்பு, சிம்ரன் -அரண்மனை 4 ஷூட்டிங் ஸ்பாட் க்ளிக்ஸ்..!
Aranmanai 4: சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 - திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அரண்மனை ஹூட்டிங் ஸ்பாட்டில் குஷ்பூ - சிம்ரன் - டான்ஸ் மாஸ்டர் பிருந்தா - சுந்தர்சி
1/7

சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை படத்தில் வசூல் இரண்டாவது நாளில் எகிறியுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
2/7

நடிகை குஷ்பு - டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில்...
3/7

ப்படத்தில் சுந்தர் சி, சந்தோஷ் பிரதாப், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ், கோவை சரளா, லொள்ளு சபா சேஷூ என ஏகப்பட்ட பேர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி அரண்மனை 4 படத்துக்கு இசையமைத்துள்ளார். இதில் வரும் பாடலில் நடிகை சிம்ரம், குஷ்பு நடனமாடியுள்ளனர்.
4/7

அரண்மனை 4 படத்தில் இறுதியில் வரும் பாடலில் இருவரும் நடனமாடியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் சுந்தர் சி, நடிகை குஷ்பு, சிம்ரன், டான்ஸ் மாஸ்டர் பிருந்தா. இவர்கள் நல்ல நண்பர்களும் கூட...
5/7

பச்சை நிற ப்ளவுஸ், மஞ்சள் நிற சேலையுடன் சிம்ரனின் நடனம் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்தது.
6/7

அரண்மனை 4 படம் முதல் நாளில் ரூ.4.15 கோடி வசூலை ஈட்டியது. 2வது நாளில் ரூ.6.42 கோடி வசூலை பெற்றுள்ளது. இரண்டு நாட்களில் ரூ.10 கோடி வசூலை பெற்றுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் இரண்டு நாட்களில் ரூ.1.08 கோடி வசூலைப் பெற்றுள்ளது.
7/7

இருவருடைய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Published at : 05 May 2024 07:31 PM (IST)
மேலும் படிக்க





















