மேலும் அறிய
Vijay Makkal Iyakkam : தமிழ்நாட்டின் அரியணையில் ஏற நினைக்கிறாரா நடிகர் விஜய் ?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் விஜய், விரைவில் அரசியலுக்கு வருவது உறுதி என உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.

விஜய் மக்கள் இயக்கம்
1/6

ஒரு பக்கம் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் சத்தமே இல்லாமல் அரசியல் அடியையும் எடுத்து வைத்து வருகிறார்.
2/6

கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்களுடன் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.
3/6

முன்னதாக உலக பட்டினி தினத்தன்று நடிகர் விஜயின் அறிவுறுத்தலின் படி 234 தொகுதிகளிலும் இலவசமாக வழங்கப்படட்து.
4/6

தற்போது தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. ஏனவே அன்றைய தினம் ’இரவு நேர பாடசாலை’ தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
5/6

மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தப்பட்சம் 4 இடங்களுக்கு மேல் பாட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பயிலகம், கல்வியகம், அறிவொளியகம் போன்ற திட்டங்களை தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
6/6

நேற்று நடைபெற்ற மக்கள் இயக்க ஆலோசனைக் கூட்டத்தில், ‘தான் ஒருவேளை அரசியலுக்கு வந்தால் படங்களில் நடிப்பதை நிறுத்தி விடுவேன்’ என்று விஜய் சொன்னதாக மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 12 Jul 2023 05:13 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion