மேலும் அறிய
ABP EXCLUSIVE : அசோக் செல்வனுக்கும் இந்த திருநெல்வேலி நடிகைக்கும் டும் டும் டும்..எங்கு?எப்போது? முழு தகவல்கள் இதோ!
Actor Ashok Selvan Marriage Exclusive : தமிழில் பிரபல நடிகர் ஒருவரின் மகளை போர் தொழில் படத்தின் கதாநாயகன் அசோக் செல்வன் திருமணம் செய்ய உள்ளதாகத் தகவல்!

அசோக் செல்வன்
1/6

நலன் குமாரசாமி இயக்கிய சூது கவ்வும் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு அருகின் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் தோன்றி தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அஷோக் செல்வன்.
2/6

சின்ன சின்ன துணைக் கதாபாத்திரங்களில் நடித்துவந்தவர் தெகிடி படத்தின் மூலம் தனது முதல் ஹிட்டை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து வாணி போஜன், ரித்திக்கா சிங் இரண்டு கதாநாயகிகள் நடித்த ஒ மை கடவுளே என்கீற ரொமாண்டிக் காமெடி படத்தில் இளைஞர்களுக்கு அபீலாகும் நடிகராக மாறினார்.
3/6

இந்நிலையில் நடிகர் அஷோக் செல்வன் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சில மாதங்களாக பேச்சு எடுபட்ட நிலையில் தற்போது இந்தத் தகவல் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. அஷோக் செல்வன் மனமுடிக்கப் போகும் அந்த பெண் யார் என்கிற கேள்வியை கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.
4/6

பிரபல நடிகரான அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனுடன் அஷோக் செல்வன் கைகோர்க்க இருக்கிறார்.
5/6

ஏற்கனவே தான் காதல் கல்யாணம் தான் செய்துகொள்வேன் என்று அஷோக் செல்வன் கூறியிருக்கிறார். தற்போது இந்தத் திருமணம் காதல் கல்யாணமா இல்லையா என்கிற கேள்வி இருந்து வருகிறது. இந்தத் திருமணம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாவது வரை ரசிகர்கள் காத்திருப்பதுதான் ஒரே வழி.
6/6

வருகின்ற செப்டம்பர் 13 ஆம் தேதி மனப்பெண் வீட்டில் எளிமையான முறையில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும். ஒரு சில குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் சின்ன நிகழ்வாக இந்த திருமணத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாக அஷோக் செல்வனின் நெருங்கிய வட்டாரத்தினர் ஒருவர் தெரிவித்துள்ளார். திருமணத்தைத் தொடர்ந்து செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னையில் வரவேற்பு விருந்து நடைபெற உள்ளது.
Published at : 12 Aug 2023 04:35 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
பொழுதுபோக்கு
கல்வி
Advertisement
Advertisement