கமலா ஹாரிஸ் முதல் ரிஷி சுனக் வரை.. முக்கிய பதவிகளில் இருக்கும் இந்திய வம்சாவளி தலைவர்களின் லிஸ்ட்..
உலகின் அதிகாரமிக்க பதவிகளில் இருக்கும் இந்திய வம்சாவளி தலைவர்களை கீழே காண்போம்.
உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் தீபாவளியைக் கொண்டாடி வரும் நிலையில், பிரிட்டன் பிரதமராகிறார் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரிட்டன் பிரதமராவது இதுவே முதல்முறை. 200 ஆண்டுகளில் இளமையான பிரதமர் இவரே ஆவார்.
உலகின் அதிகாரமிக்க பதவிகளில் இருக்கும் இந்திய வம்சாவளி தலைவர்கள்
கமலா ஹாரிஸ்
இந்தியா மற்றும் ஜமைக்காவிலிருந்து குடியேறிய பெற்றோருக்கு கலிபோர்னியாவில் பிறந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ். அந்த பதவியை வகிக்கும் முதல் பெண் ஆவார். கமலா ஹாரிஸ் 2019 இல் அதிபர் தேர்தலில் தோல்வியுற்றார். ஜனநாயகக் கட்சியின் பிரைமரி தேர்தலில் ஜோ பைடனை எதிர்கொண்டார். அரசியலில் இளம் தலைமுறை கறுப்பின பெண் தலைவர்களுக்கு
அவரின் சாதனைகள் ஊக்கமாக அமைந்துள்ளது.
பிரவிந்த் ஜக்நாத்
2017 ஆம் ஆண்டு முதல் மொரீஷியஸின் பிரதமராக இருக்கும் பிரவிந்த் ஜக்நாத்தின் மூதாதையர்கள் உத்தரபிரதேசத்தில் இருந்து வந்தவர்கள். ஜுக்நாத் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தவர்.
அந்தோணி கோஸ்டா
2015 ஆம் ஆண்டு முதல் போர்ச்சுகல் பிரதமராக இருக்கும் அன்டோனியோ கோஸ்டா, போர்த்துகீசியம் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். கோவாவில், கோஸ்டா பாபுஷ் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இது கொங்கனி மொழியில் இளம் அன்பானவர் என்று பொருள்படும்.
பிருத்விராஜ் சிங் ரூப்
பிருத்விராஜ்சிங் ரூபன் 2019 முதல் மொரீஷியஸின் ஏழாவது அதிபராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர், இந்திய ஆரிய சமாஜி இந்து குடும்பத்தில் பிறந்தவர்.
As #RishiSunak Becomes UK PM, A Look At India-Origin World Leaders In Key Roles
— ABP LIVE (@abplive) October 24, 2022
Read More:https://t.co/EAzdm6UP5y
சான் சாண்டோகி
சந்திரிகாபெர்சாத் சான் சந்தோகி, சுரிநாம் நாட்டை சேர்ந்தவர். அரசியல்வாதி மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரி ஆவார், இவர், 2020 முதல் சுரிநாம் நாட்டின் 9ஆவது ஜனாதிபதியாக உள்ளார். இவர், 1959 ஆம் ஆண்டு, சுரிநாம் மாவட்டத்தில் உள்ள லெலிடோர்ப் என்ற இடத்தில் இந்து குடும்பத்தில் பிறந்தவர்.
முஹம்மது இர்பான் அலி
முகமது இர்ஃபான் அலி, ஆகஸ்ட் 2, 2020 அன்று கயானாவின் ஒன்பதாவது அதிபராக பதவியேற்றார். இவர் மேற்குக் கடற்கரை டெமராராவில் உள்ள லியோனோராவில் இஸ்லாமிய இந்தோ-கயானீஸ் குடும்பத்தில் பிறந்தார்.