PETA : ”ஆண்கள் அசைவம் சாப்பிட்டா செக்ஸுக்கு தடை போடணும்..” : பீட்டா அமைப்பு வைத்த புது கோரிக்கை
பீட்டா அமைப்பின் கருத்துப்படி, "விலங்கு இறைச்சியின் சுவை ஆணின் ஆக்ரோஷத்தை அதிகப்படுத்தும்”
இறைச்சி உண்ணும் ஆண்களுக்கு, உடலுறவுகொள்ள பெண்கள் தடை விதிக்கவேண்டும் என்று விலங்குகள் உரிமை அமைப்பான பீப்பிள் ஃபார் தி எத்திக்கல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ் (பீட்டா) அறிவித்துள்ளது.
பீட்டா அமைப்பின் கருத்துப்படி, ”விலங்கு இறைச்சியின் சுவை பிடிப்பது டாக்ஸிக் மஸ்குலினிட்டி எனப்படும் ”ஆண்கள் அசைவம் சாப்பிட்டா, பெண்கள் செக்ஸ் தடை போடணும்.. பீட்டா அமைப்பு வைத்த புது கோரிக்கைக்கு அறிகுறியாகும், இது சமூகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்”. இப்படியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆண்களுடன் தொடர்புடைய தீங்கு விளைவிக்கும் அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகள் ஆகியவற்றைக் குறிக்கிறது.
இந்த அமைப்பின் ஜெர்மன் பிரிவு, PLOS One என்ற அறிவியல் இதழின் ஆராய்ச்சியை மேற்கோள் காட்டியுள்ளது, இதில் ஆண்கள் பெண்களை விட 41 சதவீதம் அதிகமான கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகளுக்கு காரணம் என்று கண்டறிந்ததாக தெரிவிக்கிறார்கள்.
PETA ஜெர்மனியின் ஆர்வலர்கள் இப்போது இறைச்சி உண்ணும் ஆண்கள் அனைவரையும் "பாலியல் தடைக்கு" உட்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். "உலகைக் காப்பாற்ற பாலுறவை மறுக்கவும்" எனப் பெண்களை வலியுறுத்துகின்றனர்.
"அவர்களை நாம் அனைவரும் அறிவோம், பீர் பாட்டில்கள் மற்றும் பார்பிக்யூ டோங்ஸ்கள், இறைச்சிகள், அதிக விலை கிரில்லில் சிஸ்லிங் சாசேஜ்கள் அனைத்துமே பிரச்சனையை உருவாக்குகிறது" என்று PETA-இன் பிரச்சாரக் குழுத் தலைவர் டேனியல் காக்ஸ் ஜெர்மனி, செவ்வாயன்று அந்த அமைப்பின் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஒரு அறிக்கையில், 'பீட்டா அனைத்து இறைச்சி உண்ணும் ஆண்களுக்கும் பாலுறவைத் தடை செய்ய அழைப்பு விடுக்கிறது - ஆண்களின் உணவு பெண்களை விட 41 சதவீதம் அதிக க்ரீன் ஹவுஸ் வாயுக்களை உற்பத்தி செய்கிறது'. என்கிறது.
"இப்போது டாக்ஸிக் மஸ்குலினிட்டி (ஆண் அதிகார ஒடுக்குமுறை) மனித காலநிலைக்கு தீங்கு விளைவிக்கும் என்பதற்கு அறிவியல் சான்றுகள் உள்ளன. எனவே, ஆண்களுக்கு 41 சதவிகிதம் அதிகமான இறைச்சி வரி பொருத்தமானதாக இருக்கும்” என்கிறது பீட்டா. "அனைத்து இறைச்சி உண்ணும் ஆண்களுக்கும் உடலுறவு அல்லது இனப்பெருக்கம் மீதான தடை இந்த சூழலில் [நடைமுறை] பொருத்தமானதாக இருக்கும்” எனவும் தெரிவிக்கிறது
"நீங்கள் காலநிலை நெருக்கடியைத் தீர்க்க விரும்பினால், நீங்கள் இறைச்சி நுகர்வைக் குறைக்க வேண்டும், மேலும் இறைச்சியைச் சுற்றி ஆண்மையவாதம் கட்டமைக்கப்படும் வரை அது நடக்கப்போவதில்லை" என்று சூழலியல் பெண்ணியவாதி காக்ஸ் கூறினார்.
’இறைச்சி நுகர்வுடன் தொடர்புடைய எதிர்மறையான தாக்கங்கள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கிறது பீட்டா. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூற்றுப்படி, இறைச்சி மற்றும் பால் பொருட்கள் குறிப்பாக உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 14.5 சதவிகிதம் ஆகும். ஐ.நா மூலம் தங்கள் இறைச்சி உட்கொள்ளலைக் குறைக்க புதிய சலுகைகளை முன்மொழிய வேண்டும் என பன்னாட்டு அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது பீட்டா.