அமெரிக்காவிலிருந்து வந்த இந்தியர்களின் கை கால் கட்டபட்டதா.! ஜெய்சங்கர் சொன்னது என்ன?
Indians deported From USA: அமெரிக்க ராணுவ விமான மூலம், இந்தியர்கள் கை-கால்களில் விலங்கு மாட்டப்பட்டு மரியாதைக்குறைவாக அனுப்பியதாக, எதிர்க்கட்சிகள் கண்டனத்திற்கு ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்

அமெரிக்கா நாட்டில், சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில் கைவிலங்கு பூட்டப்பட்டதாக சர்சை வெடித்த நிலையில், நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.
வெளியேற்றப்படும் இந்தியர்கள்
அமெரிக்க நாட்டின் அதிபராக ட்ரம்ப் பதவியேற்றவுடன் பல அதிரடி உத்தரவுகளில் பிறப்பித்தார். அதில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை உடனடியாக நாடு கடத்துவதும் ஒன்று. இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்ட நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்கள் கணக்கெடுப்பப்பட்டு, அவர்களை அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பும் பணியை அமெரிக்கா தொடங்கியிருக்கிறது. அமெரிக்காவில், சுமார் 7.5 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முதற்கட்டமாக 105 இந்தியர்களுடன் அமெரிக்க ராணுவ விமானம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிற்கு நேற்று வந்தடைந்தது.
அமெரிக்காவிலிருந்து இந்தியர்களை திருப்பி அனுப்பும்போது, அவர்களது கை மற்றும் கால்களில் விலங்குகள் பூட்டப்பட்டிருந்தது போன்ற காட்சியை, அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது நாடு முழுவதும் பெரும் , சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. மேலும், அனைவருக்கும் ஒரே கழிவறைதான் ஒதுக்கப்பட்டதாகவும், தாங்கள் கைதிகள் போலவே கையாளப்பட்டதாகவும், தகவல்கள் வெளியானது.
USBP and partners successfully returned illegal aliens to India, marking the farthest deportation flight yet using military transport. This mission underscores our commitment to enforcing immigration laws and ensuring swift removals.
— Chief Michael W. Banks (@USBPChief) February 5, 2025
If you cross illegally, you will be removed. pic.twitter.com/WW4OWYzWOf
எதிர்க்கட்சிகள் கண்டனம்:
இச்சம்பவம் குறித்து, காங்கிரஸ் , சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தனர். டிரம்ப்பின் நண்பர் என்ற சொல்லும் மோடி, என்ன செய்து கொண்டிருக்கிறா? வெளியுறவுத்துறை அமைச்சர் என்ன செய்கிறார் என்றும் கேள்வி எழுப்பின. மேலும், அமெரிக்காவை ஒரு எதிர்ப்பு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன்?, ஒரு சிறிய நாடு கொலம்பியா , அது அந்நாட்டவர்களை கை-கால் கட்டப்பட்டு அனுப்பபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விமானத்தை திருப்பி அனுப்பியது. இந்தியா பொருளாதரத்தில் முதல் 5 இடத்தில் இருக்கிறது. ஒரு எதிர்ப்புகூட தெரிவிக்காத்து ஏன் என எதிர்க்கட்சிகள் பாஜக அரசை கண்டித்தினர்.
இந்நிலையில், இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளதாவது , “
ஒருவர், சட்டவிரோதமாக வெளிநாட்டில் வசிப்பது கண்டறியப்பட்டால், தங்கள் நாட்டினரை திரும்பப் பெறுவது அனைத்து நாடுகளின் கடமையாகும். இது, இந்தியாவிற்கு மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் கொள்கையும் இல்லை. இது சர்வதேச உறவுகளில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையாகும்.
நாடுகடத்தப்படும் செயல்முறையானது புதியதும் இல்லை , பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. 2009 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட விவரங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர்களின் எண்ணிக்கை ஆண்டு வாரியாக எனது அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
Also Read: PM Modi-Trump Inauguration: சீனாவுக்கு அழைப்பு; மோடிக்கு இல்லை.! நண்பரை, டிரம்ப் அழைக்காதது ஏன்?
விமானம் மூலம் நாடு கடத்தப்படுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை, இது 2012 முதல் நடைமுறைக்கு வருகிறது.
இருப்பினும், பெண்கள் மற்றும் குழந்தைகள் கட்டுப்படுத்தப்படவில்லை ( அதாவது கட்டுப்பாடுகள தளர்வு என்பது கை-கால் விலங்குகள் அகற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன ) என்று அமெரிக்க தரப்பில் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உணவு அல்லது பிற தேவைகளின் போதும் மருத்துவ அவசரநிலைகளின் போதும் இந்தியர்கள் கவனிக்கப்பட்டனர்.
கழிப்பறை இடைவேளையின் போது, தற்காலிகமாக கட்டுப்படுத்தப்படவில்லை. ( அதாவது கட்டுப்பாடுகள தளர்வு என்பது கை-கால் விலங்குகள் அகற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன )
கடந்த நடைமுறையிலிருந்து எந்த மாற்றமும் இல்லை, பிப்ரவரி 5, 2025 அன்று அமெரிக்கா மேற்கொண்ட விமானத்திற்கான கடந்த கால நடைமுறையிலிருந்து எந்த மாற்றமும் இல்லை
திரும்பும் நாடுகடத்தப்படுவர்கள் விமான பயணத்தின் போது எந்த வகையிலும் தவறாக நடத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த நாங்கள் அமெரிக்க அரசாங்கத்தோடு தொடர்பில் உள்ளோம்.
அதே நேரத்தில், சட்டப்பூர்வ பயணிகளுக்கான விசாவை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்போது, சட்டவிரோத குடியேற்றத்தையும் கடுமையாக ஒடுக்குவதில் நமது கவனம் இருக்க வேண்டும் .
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவிக்கையில்,இந்தியர்கள் மீண்டும் நாடு கடுத்தப்படுவதில் பிரச்னையில்லை; அவர்கள் எப்படி அனுப்பப்படுகின்றனர் என்பதுதான் பிரச்னை. இதுபோன்று மரியாதைக்குறைவாக அனுப்பப்படுவதை ஏற்க கூடிய வகையில் இல்லை என தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

