மேலும் அறிய
Gold mining: தங்கம் விலை நம்ப முடியாத அளவிற்கு குறைய போகிறதா.? கண்டுபிடிக்கப்பட்ட தங்க மலை- பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன
Gold mining: தங்கத்தின் விலை நம்ப முடியாத வகையில் குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்..
Gold mining in China
1/4

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக நடுத்தர வர்க்க மக்களால் தங்களது பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு தங்க நகைகளை வாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள். நகைகடைகளில் தங்க நகைகளை வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே எப்போது தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்த்து காத்துள்ளனர். அதற்கு ஏற்றார் போல சமூக வலைதளங்களில் பரவிய ஒரு செய்தி தான் தங்க நகை பிரியர்களுக்கு குஷியான தகவலாக மாறியுள்ளது.
2/4

உலகத்தில் இதுவரை கண்டுப்பிடிக்காத வகையில் தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது தான் முக்கிய தகவலாகும். ஆமாம்..சீனாவின் பிங்ஜியாங் கவுண்டியில் உள்ள 'வாங்கு' என்ற பகுதியில் தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்தில் ஆயிரம் மெட்ரிக் டன் மேல் தங்கம் இருப்பதாகவும், இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தங்க வயல்களிலேயே இதுதான் மிகவும் பெரியது என கூறப்படுகிறது. ஒரு டன் பாறையை வெட்டி எடுத்தால் அதில் 8 கிராம் தங்கம் கிடைத்தது தான் அதிக மதிப்புள்ள தங்க சுரங்கமாக இருந்து வந்தது. தற்போது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுரங்கத்தில் உள்ள ஒரு டன் பாறையில் 138 கிராம் தங்கம் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
Published at : 30 Dec 2025 12:51 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















