Deepseek AI: ஷாக்கில் டிரம்ப்! வரி நெருக்கடிக்கு டீப்சிக் ஆயுதத்தை எடுத்த சீனா! ஒரே நாளில் ரூ5 லட்சம் கோடி நஷ்டம்
Deepseek AI: அமெரிக்க அதிபர் டிரம்ப் வரிவிதிப்பு மூலம் சீனாவிற்கு நெருக்கடி கொடுத்த நிலையில், டீப்சிக் ஏஐ தொழில்நுட்பத்தால், அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமே அரண்டு கிடக்கிறது.

உலக முழுவதும், இன்று பலராலும் தொழில்நுட்ப ரீதியாக உச்சரிக்கப்படும் வார்த்தை என்னவென்றால் டீப்சிக் ஏஐ-தான். உலக அளவில் தொழில்நுட்பத்தில் வல்லமை படைத்த நாடு, நாங்கள்தான் நம்பர் ஒன் என அமெரிக்கா என கூறி கொண்டிருக்கும் போது, 1957ல் ரஷ்யா முதல் செயற்கைகோளான ஸ்புட்னிக்கை விண்ணில் செலுத்தி, அமெரிக்காவை மட்டுமன்றி உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதுபோன்ற தருணம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு துறையில், அமெரிக்காதான் முதலிடம் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில், டீப்சிக் என்ற செயற்கை நுண்ணறிவு அமைப்பை கொண்டு வந்து அமெரிக்காவை அலறவிட்டிருக்கிறது சீனா. இதையடுத்து, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். சரி, டீப்சிக் ஏஐ என்றால்? ஏற்கனவே பல ஏஐ இருக்கும்போது, இதில் என்ன சிறப்பு? குறிப்பாக, அமெரிக்கா அச்சம் கொள்வது ஏன்? என , இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ஏஐ என்றால் என்றால் என்ன?
சில தரவுகளை கொடுத்து, அதன்படி இயங்கும் வகையில் ஒரு தொழில்நுட்பம் தயாரிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு , கால்குலேட்டரில் , இரண்டு எண்களை கூட்டுவதற்கு, 2 எண்களை கொடுத்து, பிளஸ் குறியை கொடுத்தால் , விடை கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், ஒரு தொழில்நுட்பமானது, நமக்கு இதுதான் தேவை என, அதுவாகவே புரிந்து கொண்டு, நமக்கு தகவல்களை தரும் தொழில்நுட்பம்தான் , செயற்கை நுண்ணறிவு. இதன் மூலம், உங்களுக்கு தேவையானவற்றை கொடுத்தால் போதும், கூகுள் தேடலில் கிடைப்பது போல, பல தகவல்களை தராமல், உங்களுக்கு என்ன தேவை , அதில் எது சரியான மற்றும் நம்பகரமான தகவல்களை திரட்டி கொடுக்கும்.உலகளவில், தற்போது பல ஏஐ சேட் பாட்கள் உள்ளன. சேட் பாட் என்றால், நமக்கு எது தேவை என்பதை, அதில் டைப் செய்தால்( சேட் செய்தால் ) போதும், அது பதிலாக கொடுக்கும். இதனால் சேட் பாட் என அழைக்கப்படுகிறது.
இதன மூலம், பள்ளி-கல்லூரி மாணவர்களின் வீட்டு பாடங்களை முடித்துக் கொள்ள முடிகிறது; சந்தேகங்களை தீர்க்கிறது; ஐடி துறையில், கோடிங் உள்ளிட்டவைகளையும் விரைவில் வழங்குகிறது. இதனால், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற ஆரம்பித்திருக்கிறது.

டீப்சிக் ஏஐ சேட் பாட் சிறப்பு:
உலகளவில் பிரபலமாக இருக்கும் சேட் பாட்களான ஓபன் ஏஐ நிறுவனத்தின் சேட் ஜிபிடி, கூகுள் நிறுவனத்தில் ஜெமினி, மெட்டா ( வாட்சப் ) நிறுவனத்தின் மெட்டா ஏஐ , எலான் மஸ்க்கின் க்ரோக் ஏஐ ஆகியவை உள்ளன. இவை அமெரிக்கா நிறுவனத்தைச் சேர்ந்தவை.
இன்று பெரும்பாலோனோர் பயன்படுத்தும் சேட் ஜிபிடி-ஐ உருவாக்க, 4, 500 ஊழியர்கள் இணைந்து 10 வருடங்களானது. இதற்கான செலவானது, 500 பில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் 50 லட்சம் கோடி ). ஆனால் டீப்சிக் உருவாக்க 200 ஊழியர்கள் சேர்ந்து 2 வருடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டனர் . இதற்கான செலவானது 10 மில்லியன் டாலர் மட்டுமே ( இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 49 கோடி ) என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read: Israel Hamas Ceasefire: டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?
டீப் சிக்கிற்கு எப்படி சாத்தியம்?
ஏஐ தொழில்நுட்பம் இயங்குவதற்கு மிகப் பெரிய அளவிலான மென்பொருள் மற்றும் வன்பொருள் அமைப்பு தேவை. கணிப்பொறி இயங்க சிபியு தேவைப்படுவது போல, உலகளவில் உள்ள தகவல்களை திரட்டி , தானாக யோசித்து, துல்லியமாக தர வேண்டும் என்றால், மிகப் பெரிய கட்டமைப்பு தேவை. சில ஏஐ நிறுவனம், மின்சாரத்திற்காக , தனியாக அணுமின் நிலையமே வைத்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இதனால், ஏஐ-ல் வல்லமையுடன் திகழ்ந்த அமெரிக்கா , தனது சிப் தொழில்நுட்பத்தை சீனாவுக்கு விற்பனைக்கு தடை விதித்தது. மற்ற நாடுகளுக்கும் விற்பனை செய்வதிலும், பல கட்டுபாடுகளை வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக உலக அளவில் ஏஐ சிப் உருவாக்குவதில் , வலுவான நிறுவனமான என்விடியா ( ENVIDIA ) , தனது சிப்களை சீனாவுக்கு விற்பனை செய்வதில்லை.
சீனாவிற்கு, என்விடியா ஏஐ சிப் வழங்காதபோதும், அமெரிக்காவுக்கு இணையாக, ஏன், அதைவிட சக்திவாய்ந்த ஏஐ சேட்பாட்டை எப்படி உருவாக்கியது எப்படி என்பது குறித்தான கேள்விக்கு, “ அமெரிக்கா தடை விதிப்பதற்கு முன்பாகவே, வாங்கி வைத்த ஏஐ சிப்களை வைத்தும், மேலும், பழைய சாதனங்களில் இருந்த ஏஐ சிப்களை பயன்படுத்தியும், குறைவான சிப்களுடன் வலுவான தொழிநுட்பத்துடன் உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனால்தான், குறைவான செலவு எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும், அதனால், குறைவான செலவில் பயனர்களுக்கு கொடுக்க முடிவதாகவும் சீனா தரப்பு தெரிவிக்கிறது. மேலும், டீப்சிக் ஓபன் சோர்சாக இருப்பதால், தனிநபர்களும், அந்த கோடிங்கை பார்க்க முடியும், அவர்களுக்கு ஏற்ப மாற்ற முடியும்.

அமெரிக்காவுக்கு விழுந்த அடி:
அமெரிக்கா, ஏஐ தொழில்நுட்பத்தில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும் என சில நாட்களுக்கு முன்புகூட ஸ்டார் கேட் என்ற திட்டத்தை தொடக்கியது. அதற்கு 43 லட்சம் கோடி முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், குறைவான செலவில் ,வலுவான ஒன்றை உருவாக்கி இருக்கிறது டீப்சிக்; இதற்கு ஏன் இவ்வளவு செலவு என , முதலீடு செய்த முதலீட்டாளர்கள், இதர நிறுவனங்களிலிருந்து வெளியேற தொடங்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக என்விடியா நிறுவனத்தின் பங்குகள் பலமான சரிவை கண்டன.
பங்குச் சந்தையில், அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளின் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்தன.
அமெரிக்காவின் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சேட் ஜிபிடி ப்ரீமியம் வெர்சன் மாதத்த்திற்கு 20 டாலர் என இருக்கும் நிலையில், டீப்சிக் ப்ரீமியம் வெர்சன் மாதத்திற்கு 0.5 டாலரை நிர்ணயித்துள்ளது. இதனால், குறைவான விலையில், வலிமையான தொழில்நுட்பம் கிடத்துள்ளதாக கூறி, பலரும் டீப் சிக்கை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
லியான் வென்ஃபெங் என்ற சீன நபரால் கண்டுபிடிக்கப்பட்ட டீப்சிக், திமிலங்கத்தின் லோகாவை கொண்டுள்ளது. அதற்கேற்றாற் போல, மற்ற நிறுவனங்களை திமிலங்கம் போல விழுங்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், புதிதாக பதவியேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் , சீனாவிற்கு பல தடைகள் விதித்து வரும் நிலையில், சைலண்ட்டாக அமெரிக்காவை அலறிவிட்டிருக்கிறது சீனாவின் டீப்சிக். இது அமெரிக்கர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் என்றும், அந்நாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Also Read: வெடித்த எலான் மஸ்க் ஸ்டார்சிப் ராக்கெட்: நெருப்பு மழையாக மாறிய வானம்: கூலாக பதிலளித்த மஸ்க்.!





















