மேலும் அறிய

Erode DMK : ’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?

'அமைச்சர் முத்துசாமியின் ஆதரவும் திருவாசகத்திற்கு இருப்பதால் அவருக்கு எம்.எல்.ஏ சீட் பெற்றுத்தர முத்துச்சாமியே பரிந்துரை செய்வார் என்பது ஈரோடு மாவட்ட இளைஞரணியினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது’

சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், திமுகவிலும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுப்பவர்களுக்கான அவகாசமும் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், தொடர்ந்து 2வது முறை ஆட்சி கட்டிலில் அமர திமுக தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறது. அதில் முக்கியமாக திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களை சமரசமின்றி தேர்வு செய்ய திமுக தலைமை முடிவு செய்திருக்கிறது. Erode DMK : ’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?

அதிமுகவிற்கு செக் வைக்க திமுக வியூகம் 

குறிப்பாக, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் அதிமுகவின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் மக்கள் செல்வாக்குள்ள வேட்பாளர்களை களமிறங்கி அவர்களை வெற்றிபெற செய்து, திமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலத்தை மாற்ற திமுக வியூக வகுப்பு நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் இளைஞரணி 

அந்த வகையில், ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் பழைய வேட்பாளர்களுக்கு பதிலாக இளம் ரத்தம் பாயும் இளைஞர்களை களமிறக்க திமுக முடிவு செய்திருக்கிறது. குறிப்பாக, திமுக இளைஞரணியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு இந்த முறை அதிக அளவில் வாய்ப்பு கொடுத்து, உதயநிதி ஸ்டாலினுக்கு என ஒரு தனி பட்டாளத்தை உருவாக்கிக்கொடுக்கவும் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

உதயநிதியுடன் திருவாசகம்
உதயநிதியுடன் திருவாசகம்

ஜெ.திருவாசகத்திற்கு பிரகாசமான வாய்ப்பு 

இந்நிலையில், ஈரோடு திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ.திருவாசகத்திற்கு ஈரோடு மாவட்ட தொகுதிகளில் ஒரு தொகுதியை உதயநிதி ஸ்டாலின் ஒதுக்கி கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நீட் உண்ணாவிரத போராட்டம் தொடங்கி, இளைஞரணியை இல்லந்தோறும் தனது மாவட்டத்தில் கொண்டுச் சேர்த்ததன் மூலம் உதயநிதி ஸ்டாலினிடம் நற்பெயரை பெற்றுள்ள திருவாசகத்திற்கு இந்த முறை சீட் உறுதி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.Erode DMK : ’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?

இளைஞர்கள் அறிந்த முகமாக இருக்கும் திருவாசகம் 

குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தலில் அதே இளைஞரணியை சேர்ந்த பிரகாஷ்க்கு வாய்ப்பு அளித்தார் உதயநிதி ஸ்டாலின். அவரை வெற்றிபெற வைக்க திருவாசகமும் மிகப்பெரிய அளவில் வேலை பார்த்திருக்கிறார். மாவட்ட அளவில் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது, அரசு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்து தருவது என ஈரோடு மாவட்ட இளைஞர்கள் மத்தியில் திருவாசகம் பிரபலமாக அறியப்பட்டு வருகிறார். குறிப்பாக, புயல், மழை, வெள்ள பாதிப்புகளின்போது திருவாசகம் செயல்பட்ட விதமும், மக்களுக்கு அவர் நலத்திட்டம் செய்து உதவி செய்ததும் அந்த மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. 

முதலியார் சமூக வாக்குகளை அறுவடை செய்யும் திருவாசகம் 

சாதி, மதங்களுக்கு அப்பாற்றப்பட்டு திருவாசகம் செயல்பட்டாலும் மாவட்டத்தில் பெரிய  அளவில்  முதலியார் சமூக வாக்குகள் இருக்கும் நிலையில், திருவாசகம் போட்டியிட்டால் மற்ற சமுக வாக்குகளுடன் சேர்த்து கூடுதலாக முதலியார் வாக்குகள் அப்படியே இவருக்கு கிடைக்கும் என்பது அப்பகுதி திமுகவினரின் கருத்தாக இருக்கிறது. 

அமைச்சர் முத்துசாமியின் ஆதரவு கூடுதல் பலம்

இளைஞரணியை சேர்ந்தவர்காக திருவாசகம் இருந்தாலும் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான முத்துசாமியின் ஆதரவும் திருவாசகத்திற்கு இருப்பதால், இந்த முறை அவருக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்க அமைச்சர் முத்துசாமியே பரிந்துரை செய்வார்கள் என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.Erode DMK : ’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?

ஈரோடு கிழக்கு அல்லது மேற்கில் சீட் கன்பார்ம் 

மேலும் முதுநிலை பொறியயல் பட்டப்படிப்போடு சேர்த்து எம்.பி.ஏவும் படித்துள்ளதால் படித்த இளைஞரான திருவாசகத்திற்கு சீட் கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. 8 வயதில் இருந்தே மொழிப் போர் போராட்டம், ஈழத்தமிழருக்கான போராட்டம் என களத்திலும் தொடர்ந்து பயணிப்பதால் ஈரோடு கிழக்கு அல்லது ஈரோடு மேற்கு ஆகிய இரு தொகுதிகளில் ஒரு தொகுதியை உதயநிதி திருவாசகத்திற்கு நிச்சயம் பெற்றுக் கொடுப்பார் என்பது ஈரோடு மாவட்ட இளைஞரணியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
திமுகவுக்கு கெட்அவுட்.. தவெகவுக்கு கட் அவுட்... விஜய்யுடன் கரம்கோர்க்கும் திருமாவளவன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அதிர்ந்த மாநாடு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget