மேலும் அறிய

முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...

சட்டம் ஒழுங்கு கைமீறி போய்விட்டது என்பதைத்தான் முதலமைச்சர் “ஓவர் ஓவர்” என கையசைப்பின் மூலம் தெரிவித்தாரோ…?

தைலாபுரம் : தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதைச் சுட்டிக்காட்டி, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர்  ராமதாஸ் தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் செய்த 'ஓவர் ஓவர்' என்ற கையசைப்பைச் சட்டம் - ஒழுங்கு நிலையுடன் ஒப்பிட்டு அவர் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்., 

சட்டம் ஒழுங்கு கைமீறி போய்விட்டது என்பதைத்தான் முதலமைச்சர் “ஓவர் ஓவர்” என கையசைப்பின் மூலம் தெரிவித்தாரோ…?

கடந்த சில நாட்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள கடம்போடு வாழ்வு கிராமத்திற்கு வந்த கும்பல், இருசக்கர வாகனத்தில் சென்ற ஜான் என்ற மாற்றுத்திறனாளியையும், வட இந்தியத் தொழிலாளியையும் அரிவாளால் வெட்டி கொன்ற அக்கும்பல், அவர்களின் இருசக்கர வாகனத்தையும் பறித்துக் கொண்டு தேனீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியது. இதில் 7 பேர் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜூ என்பவரிடம் கடந்த 3-ம் தேதி டாஸ்மாக் கடைக்கு சென்ற ஒரு கும்பல் தகராறு செய்து அரிவாளால் அவரை வெட்டியது. 

தப்பியோடிய அவரை விடாமல் விரட்டிச் சென்ற கும்பல், வழியில் தென் பட்ட ஆண், பெண்களை அரிவாளால் வெட்டியது. இந்த தாக்குதலில் ராஜூ தவிர, தினேஷ், ராஜேந்திரன், சுப்ரமணியன் ஆகியோர் காயமடைந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, 5 பேரை கைது செய்தனர். இதற்கிடையே கோவை, சூலூரில் ஆயுதங்களுடன் இருசக்கர வாகனத்தில் சுற்றிய இருவரை பிடிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்று உடன் இருந்த காவலர்களையும் தாக்க முயன்றதால் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்து அவருடன் மேலும் 4 பேரையும் காவல்துறை கைது செய்துள்ளது. 

முதலைமைச்சர் காங்கிரசுடன் கூட்டணி ஒப்பந்தத்தை முடித்ததை ’ஓவர்’ என கையசைத்ததாக அவர் விளக்கம் அளித்தாலும், அதை வைத்து ‘ ஆல் பினிஷ்’ என நான் சொன்னது போல வைரலாக்கிவிட்டனர் என்றார். இந்த மூன்று நிகழ்வுகளும் அடுத்தடுத்து நடைபெற்றுள்ளதால், ‘ ஆல் பினிஷ்’ என சட்டம் ஒழுங்கு கைமீறி போய்விட்டது என்றுதான் எண்ணி வைரலாக்கப்பட்டதோ என்றே எண்ணவைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

டெய்லி ரூ.6 கட்டுங்க... 3 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கிடைக்கும்... முழு விபரம் உள்ளே!!!
டெய்லி ரூ.6 கட்டுங்க... 3 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கிடைக்கும்... முழு விபரம் உள்ளே!!!
தமிழகத்தில் இன்று, நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னை? - இன்றைய வானிலை ரிப்போர்ட்
தமிழகத்தில் இன்று, நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னை? - இன்றைய வானிலை ரிப்போர்ட்
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
337 கிளை வாய்க்கால்களின் மொத்த நீளம் 1,232 கி.மீ... 88 ஆண்டுகள் நிறைவு: செயற்கை ஆறான புது ஆற்றின் பின்னணி
337 கிளை வாய்க்கால்களின் மொத்த நீளம் 1,232 கி.மீ... 88 ஆண்டுகள் நிறைவு: செயற்கை ஆறான புது ஆற்றின் பின்னணி

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
US Iran War: “48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
“48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Embed widget