Food Photo award: சர்வதேச புகைப்படக்கலை அங்கீகாரம் : விருதுவென்ற கபாப் விற்பனையாளர் ஃபோட்டோ..
காஷ்மீர் நகரில் கேபாப் விற்கும் நபரை எடுத்த படம் ஒன்று உணவு தொடர்பான சர்வதேச விருது ஒன்றை பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட சில உணவு தொடர்பான படங்களை வைத்து பிங்க் லேடி ஃபுட் போட்டோகிராஃபர் விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டிற்கான விருது இந்தியாவைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்தியாவைச் சேர்ந்த தேப்தத்தா சக்ரபோர்த்தி என்பவருக்கு 2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த போட்டோ விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் காஷ்மீர் பகுதியில் இரவு நேரத்தில் கேபாப் விற்கும் நபர் ஒருவரை படம் எடுத்துள்ளார். அந்தப் படத்திற்கு ‘கேபாபியானா’ என்ற தலைப்பை வைத்திருந்தார். இந்தப் படம் பலரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.
Overall Winner
— Pink Lady® Food Photographer of the Year (@FoodPhotoAward) April 26, 2022
And finally, huge congratulations to Debdatta Chakraborty, Overall Winner of the 2022 @FoodPhotoAward Competition with Kebabiyana.
An amazing winning image! #FoodPhotoAwards22 pic.twitter.com/eQ0eQTsRqQ
இது தொடர்பாக இந்த விருதின் நிறுவனர் கரோலின், “தற்போதைய உலகத்தில் அன்பு அதிகம் தேவைப்படுகிறது. அந்தவகையில் இந்தப் படம் மிகவும் முக்கியமான விஷயங்களை சிறப்பாக படம்பிடித்து காட்டியுள்ளார். இந்தப் படத்தில் பறக்கும் புகை மூட்டத்திற்கு நடுவே ஒருவர் பிறருக்கு கொடுப்பதற்காக உணவு சமைப்பது சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் எளிமையாக இருந்தாலும் அது நமக்கு உணவின் முக்கியத்துவத்தை அறிவுறுத்துகிறது. ஆகவே இது நம்முடைய உள் மனதை தொடும் வகையில் அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்த விருதிற்கு 60 நாடுகளிலிருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களுடைய படத்தை அனுப்பியுள்ளனர். அவர்களில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த நபர்களை தேர்ந்தெடுத்து தற்போது பரிசு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்