மேலும் அறிய

உயிரிழந்த ஓட்டல் உரிமையாளர் உடல் மீண்டும் தோண்டப்பட்டது ஏன்? - விழுப்புரத்தில் பரபரப்பு

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டாஸ்மாக் கடை உணவக மாஸ்டரின் உடலுக்கு மறு உடற்கூறு ஆய்வு ஆட்சியர் பழனி முன்னிலையில் தொடங்கியது.

விழுப்புரம்: உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டாஸ்மாக் கடை உணவக மாஸ்டரின் உடலுக்கு மறு உடற்கூறு ஆய்வு ஆட்சியர் பழனி முன்னிலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவில் வசித்து வந்தவர் ராஜா. இவருக்கு அஞ்சு என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ராஜா, திருப்பச்சாவடிமேட்டில் உள்ள டாஸ்மாக் கடை உணவகத்தில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 9-ந்தேதி வழக்கம்போல் இரவு வேலை முடித்துவிட்டு ராஜா, அங்குள்ள உணவகத்திலேயே படுத்து தூங்கினார். மறுநாள் 10-ந் தேதி காலை ரோந்துப்பணியில் ஈடுபட்ட தாலுகா போலீசார், ராஜாவை சந்தேகத்தின்பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன் பின்னர் ராஜா, 10 மதுபாட்டில்களை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து சொந்த ஜாமீனில் விட்டுள்ளனர்.

போலீசார் தாக்கியதால் இறந்தார்

அன்று காலை 10.30 மணியளவில் வீட்டிற்கு வந்த ராஜா, தன்னை போலீசார் பூட்ஸ் கால்களால் தாக்கியதாகவும், அதனால் நெஞ்சு பகுதியில் அதிகமாக வலி இருப்பதாகவும் மனைவி அஞ்சுவிடம் கூறியிருக்கிறார். உடனடியாக ராஜாவை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதன் பிறகு அருகில் உள்ள மேற்கு போலீஸ் நிலையத்தில் ராஜாவின் மனைவி அஞ்சுவை போலீசார் அழைத்து, அவரது கணவர் வீட்டிலேயே இறந்து விட்டதாக ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர். பின்னர் அவசர, அவசரமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ராஜாவின் உடலை எடுத்துச்சென்று ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இதுவெல்லாம் போலீசாரின் தூண்டுதலின் பேரில் நடைபெற்றதாக சந்தேகம் அடைந்த அஞ்சு, நீதிமன்றத்தை நாட முடிவு செய்திருந்தார். இதையறிந்த போலீசார், ராஜாவின் உடலை எரிக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். ஆனால் அஞ்சு, தனது உறவினர்களின் ஒப்புதலோடு விழுப்புரம் கே.கே.சாலை சுடுகாட்டில் ராஜாவின் உடலை புதைத்துள்ளார்.

மறு பிரேத பரிசோதனை 

இதையடுத்து மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் மூலமாக அஞ்சு, சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். அதில் தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், போலீஸ் நிலையத்தில் வைத்து அவரை போலீசார் தாக்கியதால்தான் உயிரிழந்தார் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ராஜாவின் உடலை 8 நாட்களுக்குள் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், திருச்சி, சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் மூலமாகவோ அல்லது மதுரை, நெல்லையில் உள்ள மருத்துவர்கள் மூலமாகவோ மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், இறந்து 40 நாட்கள் ஆன நிலையில் உள்ள ராஜாவின் உடலை முழுவதுமாக ஸ்கேன் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவின் பேரில் கே.கே சாலையிலுள்ள சுடுகாட்டில் புதைக்கபட்ட ராஜாவின் உடலை ஆட்சியர் பழனி முன்னிலையில் மறு உடற்கூறு செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மறு உடற்கூறு  முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Oscars 2025: 22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 LIVE: தொடங்கியது 97-வது ஆஸ்கர் விழா! அதிக விருதுகளை தட்டிச்செல்லப்போவது யார்? முழு விவரம்
Oscars 2025 LIVE: தொடங்கியது 97-வது ஆஸ்கர் விழா! அதிக விருதுகளை தட்டிச்செல்லப்போவது யார்? முழு விவரம்
"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth | ”தலைவர் அரசியலுக்கு வருவார்? 2026ல்  நிச்சயம் நடக்கும்” ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்NEET Suicide | NEET தேர்வு பயம் மாணவி தூக்கிட்டு தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு..! | Villupuramதேசிய அரசியலில் விஜய்! மோடி, நிதிஷ்-க்கு ஸ்கெட்ச்! பிரசாந்த் கிஷோரின் மூவ்Kaliyammal DMK | எகிறிய டிமாண்ட்!குழப்பத்தில் காளியம்மாள்!தவெகவா? திமுகவா? அதிமுகவா? | MK Stalin | TVK | ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Oscars 2025: 22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 LIVE: தொடங்கியது 97-வது ஆஸ்கர் விழா! அதிக விருதுகளை தட்டிச்செல்லப்போவது யார்? முழு விவரம்
Oscars 2025 LIVE: தொடங்கியது 97-வது ஆஸ்கர் விழா! அதிக விருதுகளை தட்டிச்செல்லப்போவது யார்? முழு விவரம்
"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
"எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல" நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து..  இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
CUET Exam 2025: கியூட் தேர்வுத் தேதி அட்டவணை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
கியூட் தேர்வுத் தேதி அட்டவணையை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!
2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!
Embed widget