கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டி அலங்கார ஊர்தி... கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் மஸ்தான்
விழுப்புரம் : கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டி அலங்கார ஊர்தியினை கொடியசைத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் துவக்கி வைத்தார்
சிறுமான்மையினர் நலன்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தலைமையில், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் முன்னிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக உள்விளையாட்டரங்கில், தமிழ்நாட்டில் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக, விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகைபுரிந்த விழிப்புணர்வு அலங்கார ஊர்தியினை கொடியசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அறிவினை வளர்க்கும் கல்வியினைப்போல், உடல்நலனை பாதுகாக்கும் விளையாட்டினை அனைவரும் பின்பற்றிட வேண்டும் என்று விளையாட்டுத்துறையில் பல்வேறு சிறப்புத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி பயிலும் மாணவர்கள் அதிகளவில் விளையாட்டுப்போட்டிகளிலில் பங்கேற்றிடவும், தங்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்திடும் வகையில், மாவட்டந்தோறும் விளையாட்ட மைதானம், நிதியுதவி போன்றவையும் வழங்கி வருகிறார்கள்.
மேலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களின் முயற்சியினால், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பெருமளவில் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்து வருகிறார்கள்.
அதன் தொடர் நிகழ்வாக, 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் 2024 ஜனவரி 19 முதல் 31ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் களரிபயட்டு மற்றும் மல்லர்கம்பம் விளையாட்டுகள் திருச்சி மாநகரிலும் கூடைப்பந்து மற்றும் நாக்டா விளையாட்டுகள் கோயம்புத்தார் மாநகரிலும், கட்கா மற்றும் கோ-கோ விளையாட்டு போட்டுகள் மதுரை மாநகரிலும்,
சிலம்பம் விளையாட்டுப் போட்டிகள் அனைத்து போட்டிகள் நடைபெறும் இடங்களிலும் அறிமுகப் போட்டியாக நடைபெறவுள்ளது. இதரப் போட்டிகள் அனைத்தும் சென்னை மாநகரில் நடைபெறவுள்ளது. தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறுவதை பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மாவட்டந்தோறும் விழிப்புணர்வு அலங்கார ஊர்தி கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம், விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டி - 2023 விழிப்புணர்வு அலங்கார ஊர்தி, பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் பார்வையிடும் விதமாக கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.
மேலும், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டியின் டுழுபுழுஇ ஆயுளுஊழுவுஇ வுழுசுஊர் ரூ வுர்நுஆநு ளுழுNபு காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டியினை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் பள்ளிகள் அளவில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக கட்டுரைப்போட்டி, ஒவியப்போட்டி, குறள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி போன்ற விழிப்புணர்வு போட்டிகள் மற்றும் முதியவர்களுக்கான தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த 33 நபர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
முதல்வர் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தொடர் பயிற்சிக்கான சிறந்த பயிற்சி வல்லுநர்கள் மற்றும் பயிற்சிக்கான நிதியுதவியினை வழங்குவதோடு, விளையாட்டுத்திறனில் சிறந்து விளையாட்டு வீரர்களை தேசிய, சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறுவதற்கு தேவையான வாய்ப்பினையும் ஏற்படுத்திக்கொடுத்து வருகிறார்கள். எனவே, விழுப்புரம் மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் அனைவரும் கட்டாயம் தங்கள் திறனுக்கேற்ற விளையாட்டினை தேர்ந்தெடுத்து அதில் தங்கள் திறனை மேம்படுத்திக்கொண்டு, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்று, விழுப்புரம் மாவட்டத்திற்கும், தங்கள் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.