நீங்கள் தான் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரா ? - ஆளுநர் தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேள்வி
’’இரண்டு மாநிலங்களில் தேசியக் கொடி ஏற்றியதில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் விளக்கம்’’
புதுச்சேரி செயின்ட்தெரேஸ் வீதியில் உள்ள வண்ண அருவி ஓவியக்கூடத்தில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியை துணைநிலை ஆளுநர் தமிழிசை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இரண்டு மாநிலங்களில் கொடி யேற்றியதை சாதனையாக நினைக்கவில்லை. 2 மாநில மக்களையும் மதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் 2 மாநிலங்களிலும் கொடி யேற்றினேன். இதில் விதி முறைகளை மீறி எதையும் செய்யவில்லை. என்னுடைய தேசபக்தியை வெளிப்படுத்தவும் மக்கள் மீதான அன்பை வெளிப்படுத்தவே 2 மாநிலங்களிலும் கொடி யேற்றினேன். இதில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. முதலமைச்சர் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உள்ளது.
Visited Photo Exhibition organised by photo journalist of @NewIndianXpress Pattabiraman, Vanna Aruvi Art Gallery in Puducherry,to raise funds for kin of Puducherry journalists succumbed to #Covid.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) January 27, 2022
Purchased a photo &appealed all art connoisseurs to contribute to this noble cause. pic.twitter.com/riggutyXwX
வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் இரண்டு மாநிலங்களில் தேசிய கொடி ஏற்றிய ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன்
ஆளுநருடன் ஒற்றுமையாக செயல்பட முடியவில்லை என்பதால் ஆளுநர்கள் ஓற்றர்களாக செயல்படுவதாக நாராயணசாமி குற்றம் சாட்டுகிறார். அனைத்து மாநில ஆளுநர்களும் நடு நிலையோடு செயல்படுகிறோம். ஆளுநர்கள் வளாகத்திற்குள்ளேயே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். நாங்களும் மக்களுக்கான சேவையை செய்கிறோம். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கவர்னரை வேறு பார்வையுடன் பார்க்கிறார்கள்.
பிப்ரவரி 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறப்பு? ஆலோசனைக் கூட்டத்தில் பரிந்துரை என தகவல்
மத்திய அரசு பல நல்ல திட்டங்களை முன்வைக்க கொடுத்துள்ளது. வரும் பட்ஜெட்டிலும் பல நல்ல திட்டங்கள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு தோழமையுடன் திட்டங்களை தருகிறது. புதுவை மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ அனைத்து உதவிகளையும் செய்கிறோம் என தமிழிசை கூறினார். ஜனாதிபதியாக நீங்கள் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதே? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் சிரிப்புடன் ஆளுநர் தமிழிசை விடை பெற்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்