NIA Raid: எஸ்.டி.பி.ஐ. மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை...!
நெல்லையை போன்று தமிழ்நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று ஒரே நாளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
எஸ்டிபிஐ கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருப்பவர் நெல்லை முபாரக். இவர் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர். மேலப்பாளையத்தில் அவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த நிலையில் மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இல்லத்தில் இன்று தேசிய புலனாய்வு முகமை ( என்ஐஏ) அதிகாரிகள் அதிகாலையில் திடீரென சோதனைக்கு வந்தனர்.
என்.ஐ.ஏ. சோதனை:
காவல்துறை உதவியுடன் தேசிய புலனாய்வு முகமையினர் திடீரென சோதனைக்கு வருவதை அறிந்து நெல்லை முபாரக் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து தகவல் அறிந்த அக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு முபாரக் இல்லத்திற்கு அருகே திரண்டு வந்தனர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காரணம் என்ன?
குறிப்பாக இந்த சோதனையானது கும்பகோணம் அடுத்த திருப்புவனம் ராமலிங்கம் என்பவரது கொலை வழக்கில் நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது. அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு மதமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து திருப்புவனம் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கானது சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதோடு இந்த கொலையில் எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினருக்கு தொடர்பு இருப்பதாக கருதப்படும் நிலையில் இந்த கொலைக்கு பின்னணியில் மதமாற்றம் ரீதியான பல்வேறு சர்ச்சைகள் இருப்பதும் தேசிய புலனாய்வு உடைமை அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.
எனவே அதன் அடிப்படையில், நெல்லை முபாரக் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த கொலைக்கு பின்னணியில் நெல்லை முபாரக் மற்றும் அவர் சார்ந்த கட்சி செயல்பட்டதா என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையை போன்று தமிழ்நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று ஒரே நாளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்