மூக்குத்தி அம்மனாக நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா...செம டீல் பேசியிருக்கார்
சுந்தர் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க இருக்கும் மூக்குத்தி அம்மன் படத்திற்கு பாதி சம்பளம் மட்டுமே நயன்தாரா வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மூக்குத்தி அம்மன் 2
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இப்படத்திற்கு மக்களிடம் பரவலான வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இந்த படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுந்தர் சி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், அவ்னி சினிமாக்ஸ், ரவுடி பிக்சர்ஸ் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கின்றன. நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கும் நிலையில் ஊர்வசி, துனியா விஜய், ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு, அபிநயா மற்றும் மீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அண்மையில் இப்படத்தின் பட பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது.
நயன்தாரா சம்பளம்
மூக்குத்தி அம்மன் 2 படம் முதலில் ரூ 55 கோடி செலவில் எடுக்கப்பட இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தை பான் இந்தியளவில் வெளியிட படக்குழு முடிவு செய்தது. இதனால் படத்தின் பட்ஜெட் 112 கோடியாக உயர்ந்தது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா இந்த படத்தில் நடிக்க பாதி சம்பளம் மட்டுமே வாங்கியுள்ளதாகவும் படத்தின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஷேராக கேட்டுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா மீனா இடையில் மோதல்
மூக்குத்தி அம்மன் பட பூஜை நிகழ்வில் நடிகை நயன்தாரா நடிகை மீனாவை அவமானப்படுத்தும் விதமாக நடந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நடிகை மீனா தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ச்சியாக பதிவிட்டு வரும் பதிவுகள் நயன்தாராவுடன் அவருக்கு ஏதோ கசப்பான அனுபவம் ஏற்பட்டதை உறுதிபடுத்துகின்றன. இதுகுறித்து இரு தரப்பில் இருந்தும் எந்த வித விளக்கமுல் இதுவரை அளிக்கப்படவில்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

