எலும்பெல்லாம் அப்பளமா நொறுங்கிடும்... குட் பேட் அக்லி படத்தின் ஓஜி சம்பவம் பாடல் லிரிக்ஸ் இதோ
OG Sambavam Lyrics : அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல் ஓஜி சம்பவம் பாடலின் முழு லிரிக்ஸை இங்கே காணலாம்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள மாஸ் ஆக்ஷன் என்டர்டெயினர் குட் பேட் அக்லி. த்ரிஷா, பிரசன்னா , அர்ஜூன் தாஸ் , யோகிபாபு ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ஓஜி சம்பவம் வெளியாகியுள்ளது.
குட் பேட் அக்லி பாடல்
முன்னதாக டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த பாடலை ஜி.வி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து பாடியுள்ளார்கள். விடாமுயற்சி படத்தில் பத்திகிச்சு பாடலை எழுதிய விஷ்ணு எடவன் இந்த பாடலை எழுதியுள்ளார். ஓஜி சம்பவம் பாடலின் முழு பாடல் வரிகள் கீழ் வருமாறு
திரையரங்கம் செதறட்டும்
இவன் பெயர் முழங்க கலக்கட்டும்
பொடுசுங்கலாம் கதறட்டும்
விசில் பறக்கட்டும்
நரகத்துக்கே தெரியட்டும்
அந்த எமனுக்குமே புரியட்டும்
உலகத்துக்கே கேட்கட்டும்
செவி கிழியட்டும்
கருணையேல்லாம் கிடையாது இனி
வன்முறை தான் முடியாது இனி
அடிமழதான் பொழியும்
இது ஓஜி சம்பவம் தான் சம்பவம் தான்
நல்லவனா..
நீ பார்த்தது கெட்டவனா
கத மாறுது சாத்திக்கோடா
இது ஓஜி சம்பவம் தான் சம்பவம் தான்
மொரைச்சவன்லாம்
சவபெட்டிய ரெடியாக்கி
பத்தரமா வெச்சுக்கனும்
எலும்பெல்லாம் அப்பளமா நொறுங்கிடும் டா
விரதமெல்லாம்
இனி முடிஞ்சது
வெறித்தனம் தான் துடிதுடிக்குது
மாட்டிக்கிட்டா
உன் பரம்பர மொத்தமுமா செதறிடும்டா
வத்திகுச்சி பத்திகிச்சு ஓடிக்க
சாமிய வேண்டிட்டு சீண்டிக்க
திரையரங்கம் செதறட்டும்
இவன் பெயர் முழங்க கலக்கட்டும்
பொடுசுங்கலாம் கதறட்டும்
விசில் பறக்கட்டும்....
வெறி ஏத்தி வெறி ஏத்தி
சும்ம திமிர காட்டி எகுறாதே
RIP, RIP உனக்கு போஸ்டர் உண்டு மறக்காத
கூட்டாகத தான் இருந்தன் லேட்டா
விணாக நீ உரசி பாத்தா
எங்கே நீ போனாலும்
கொம்பனா இருந்தாலும்
பொட்டலம் கட்டுவேன் டா
பத்தாது டா உனக்கு தோட்டா
சுடாது டா பேர கேட்டா
துப்பாக்கி பீரங்கி மொத்தமா வந்தாலும்
ஒத்தாளா சம்பவம் தா
திரையரங்கம் செதறட்டும்
இவன் பெயர் முழங்க கலக்கட்டும்
பொடுசுங்கலாம் கதறட்டும்
விசில் பறக்கட்டும்
நரகத்துக்கே தெரியட்டும்
அந்த எமனுக்குமே புரியட்டும்
உலகத்துக்கே கேட்கட்டும்
செவி கிழியட்டும்
மிருகத்த எழுப்பி கோவத்த கெளப்பி
மன்னிப்பு கேட்டா கெடைக்காது
முடிஞ்சது கணக்கு ஆம்புலன்ஸ் இருக்கு
ராணுவம் வந்தாலும் தடுக்காதே
வத்திகுச்சி பத்திகிச்சு ஓடிக்க
சாமிய வேண்டிட்டு சீண்டிக்க
வா வந்து வாங்கு
வரிசையோ லாங்கு
ஒரிஜினல் கேங்ஸ்டர் ஏ.கே
மிருகத்த எழுப்பி
கோவத்த கெளப்பி
மன்னிப்பு கேட்டா....
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

