மேலும் அறிய
Advertisement
Thiruvarur: உச்சநீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை - மக்கள் நலப் பணியாளர்கள்
உச்சநீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை திருவாரூர் மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் கருத்து.
கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில் தமிழக அரசால் பணியமர்த்தப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேர், கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். 2011ல் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குமாறு தீர்ப்பு வழங்கியது ஐகோர்ட்.
சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததைத் தொடர்ந்து, வழக்கு நிலுவையில் இருந்தது
இதற்கிடையே, கடந்த ஆண்டு மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்த நிலையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு, அவர்கள் விருப்பத்தின் பேரில் ரூ.7,500 ஊதியத்தில் மீண்டும் பணி வழங்கப்படும் என சட்டப் பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து, மக்கள் நலப் பணியாளர்களை ரூ.7,500 ஊதியத்துடன் காத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணியமர்த்த தமிழக அரசு முன்மொழிவு கொண்டுவந்தது.
இதனை எதிர்த்து, விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் மறுவாழ்வு சங்கத்தின் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. பின்னர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், காத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணியமர்த்தும் தமிழக அரசின் முன்மொழிவு கட்டாயப்படுத்தவில்லை. புதிய கொள்கையின்படி பணி வழங்கும் தமிழக அரசின் முடிவுக்கு தடையில்லை. இந்த முன்மொழிவை ஏற்று பணியில் சேருபவர்கள் சேரலாம்.
அரசின் முன்மொழிவை மறுத்து பணியை ஏற்காதவர்களின் உரிமைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. ஆனால் ஒட்டுமொத்தமாக அரசின் கொள்கை முடிவை எதிர்க்க முடியாது. அரசின் புதிய கொள்கையில் விருப்பமில்லாதவர்கள் தங்களது கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைக்க அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படும் என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
இதற்கு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் நல பணியாளர்கள் 7500 ரூபாய் சம்பளம் பத்தாது எனவும் ஓய்வூதிய தாரர்களுக்கு மற்றும் பணியில் இருக்கும் போது இறந்தவர்களுக்கு வாரிசு அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
ஐபிஎல்
க்ரைம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion