மேலும் அறிய

உங்க வீட்டு குழந்தைகளை இப்படி செய்வீங்களா?.... இப்படியா தண்டனை கொடுப்பீங்க..!

உங்க வீட்டு குழந்தைகளை இப்படி செய்வீங்களா? இந்த கேள்வியுடன் மனம் பதைத்து போய் தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் கண்கள் கலங்க பெற்றோர்கள் ஒரு மனுவை அளித்தனர். அந்த மனு ஒரு வெடிகுண்டை போல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தஞ்சாவூர்: உங்க வீட்டு குழந்தைகளை இப்படி செய்வீங்களா? இந்த கேள்வியுடன் மனம் பதைத்து போய் தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் கண்கள் கலங்க பெற்றோர்கள் ஒரு மனுவை அளித்தனர். அந்த மனு ஒரு வெடிகுண்டை போல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது அய்யம்பட்டி. இங்குள்ள மக்கள் விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்கள். இங்கு செயல்பட்டு வருகிறது அரசு தொடக்கப்பள்ளி. பெற்றோர்களுக்கு மனவேதனையை ஏற்படுத்திய சம்பவம் இங்குதான் நடந்துள்ளது. இப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த கனிஷ் வர்மா. நிதிஷ், கவின், ரோஷன், சஷ்மிதா ஆகியோர் நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியரான புனிதா ஒரு மாணவி உட்பட 5 மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டி இரண்டு மணி நேரமாக வகுப்பறையில் உட்கார வைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்தது பெற்றோருக்கே தெரியாத நிலை. கடந்த கடந்த அக்டோபர் மாதம் 21ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போதுதான் பெற்றோருக்கு தெரிய வந்து கலெக்டரிடம் மனு அளிக்க செய்துள்ளது. 

உங்க வீட்டு குழந்தைகளை இப்படி செய்வீங்களா?.... இப்படியா தண்டனை கொடுப்பீங்க..!

எதற்காக மாணவ, மாணவிகளின் வாயில் செல்லோ டேப் ஒட்டப்பட்டது என்ன பின்னணி இதுதான். இப்பள்ளியில் பணியாற்றி வரும் மூன்றாம் வகுப்பு ஆசிரியை மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டப்பட்டு இருந்ததை பார்த்து அதை தன் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். ஆனால் அதை அப்போதே அனுப்பாமல் அவற்றை மாணவர்களின் பெற்றோர் செல்போனுக்கு தற்போது அனுப்பி உள்ளார். இத்தனை காலதாமதமாக அவர் அனுப்ப என்ன காரணம் என்று தெரியவில்லை. இருந்தாலும் தங்கள் குழந்தைகள் வாயில் செல்லோ டேப்புடன் இருப்பதை பார்த்த பெற்றோருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றார்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று கேட்டு உள்ளனர்.

அதற்கு அவர் கூறிய பதில் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  உங்கள் பிள்ளைகள் வகுப்பறையில் பேசிக் கொண்டு இருந்ததால் செல்லோ டேப் ஒட்டியதாக தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. இதே உங்கள் வீட்டு குழந்தையாக இருந்தால் இப்படி செய்வீர்களா என்று பெற்றோர்கள் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. படிக்க அனுப்பினால் குழந்தைகளை இப்படியா இம்சை செய்வது. கண்டிக்க வேண்டிய விதத்தில் கண்டிக்காமல் இப்படி செல்லோ டேப் ஒட்டி இரண்டு மணிநேரம் வரை உட்கார வைப்பது சரியானதா என்று கேட்டும் எவ்வித பதிலும் தலைமை ஆசிரியர் தரப்பில் இருந்து வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் புகைப்பட ஆதாரத்துடன் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்தனர். இந்த புகார் குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்க செல்போனில் தொடர்பு கொண்ட முயற்சி செய்தும் அவர் தொடர்ந்த செல்போன் அழைப்பை துண்டித்து விட்டார். உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது கல்வித்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதுதான் தற்போது தஞ்சை மாவட்ட மக்கள் மத்தியில் எழுந்துள்ள பெரிய கேள்வியாக உள்ளது.?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin slams EPS : “பொறுக்க முடியவில்லை, எடப்பாடி வயிறு எரிகிறது” பொங்கி எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
MK Stalin slams EPS : “பொறுக்க முடியவில்லை, எடப்பாடி வயிறு எரிகிறது” பொங்கி எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
”ஆளுநரை சந்திக்கலாமா, வேண்டாமா?” கூட இருக்கும் அறிவாளிகளால் குழம்பும் விஜய்..!
”ஆளுநரை சந்திக்கலாமா, வேண்டாமா?” கூட இருக்கும் அறிவாளிகளால் குழம்பும் விஜய்..!
Chennai Rains:
Chennai Rains: "நாங்க தயாரா இருக்கோம்! ஆனா பெரிய மழை இல்லை" ஆய்வு செய்தபின் துணை முதலமைச்சர் உதயநிதி பேட்டி!
Gold Silver Price: தடாலடியாக குறைந்த தங்கம் விலை! கொட்டும் மழையிலும் நகை வாங்கத் தயாரா?
Gold Silver Price: தடாலடியாக குறைந்த தங்கம் விலை! கொட்டும் மழையிலும் நகை வாங்கத் தயாரா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

S Ve Sekar VS Annamalai : ”திட்டம் தீட்டிய அண்ணாமலை!கண்டுகொள்ளாத மோடி”ஓரங்கட்டப்படும் சீனியர்கள்?Vistara Airline : கடைசியாய் ஒருமுறை..விண்ணில் பறக்கும் விஸ்தாரா!பிரியா விடை கொடுத்த பயணிகள்!RB Udhayakumar : EPS-ஐ நெருக்கும் EX அமைச்சர்கள்! குறுக்கே வரும் RB உதயகுமார்! OPS-க்கு ஆப்புThiruvarur News : தந்தை தூய்மை பணியாளர் மகள் நகராட்சி ஆணையாளர் ஒரு பெண்ணின் தன்னம்பிக்கை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin slams EPS : “பொறுக்க முடியவில்லை, எடப்பாடி வயிறு எரிகிறது” பொங்கி எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
MK Stalin slams EPS : “பொறுக்க முடியவில்லை, எடப்பாடி வயிறு எரிகிறது” பொங்கி எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
”ஆளுநரை சந்திக்கலாமா, வேண்டாமா?” கூட இருக்கும் அறிவாளிகளால் குழம்பும் விஜய்..!
”ஆளுநரை சந்திக்கலாமா, வேண்டாமா?” கூட இருக்கும் அறிவாளிகளால் குழம்பும் விஜய்..!
Chennai Rains:
Chennai Rains: "நாங்க தயாரா இருக்கோம்! ஆனா பெரிய மழை இல்லை" ஆய்வு செய்தபின் துணை முதலமைச்சர் உதயநிதி பேட்டி!
Gold Silver Price: தடாலடியாக குறைந்த தங்கம் விலை! கொட்டும் மழையிலும் நகை வாங்கத் தயாரா?
Gold Silver Price: தடாலடியாக குறைந்த தங்கம் விலை! கொட்டும் மழையிலும் நகை வாங்கத் தயாரா?
TN Rain Update: சென்னையில் விடிய விடிய கொட்டும் மழை, 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Update: சென்னையில் விடிய விடிய கொட்டும் மழை, 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடர்.. செக் வைக்கும் பாகிஸ்தான்.. அதிர்ச்சியில் ஐசிசி
Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடர்.. செக் வைக்கும் பாகிஸ்தான்.. அதிர்ச்சியில் ஐசிசி
Kanguva: அச்சச்சோ! கங்குவா படம் ரிலீஸ் ஆகாது போலயே? சூர்யா ரசிகர்களுக்கு வந்த புது சோதனை!
Kanguva: அச்சச்சோ! கங்குவா படம் ரிலீஸ் ஆகாது போலயே? சூர்யா ரசிகர்களுக்கு வந்த புது சோதனை!
Pangea Ultima: பூமிக்கு வரும் புதிய நெருக்கடி - அது என்ன பாங்கேயா அல்டிமா? மனித இனம் தாங்குமா?
Pangea Ultima: பூமிக்கு வரும் புதிய நெருக்கடி - அது என்ன பாங்கேயா அல்டிமா? மனித இனம் தாங்குமா?
Embed widget